பயணிகள் சிலருக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், திட்டமிட்ட விமானங்களை திடீரென எவ்வித முன்னறிப்பின்றி சீன அரசு ரத்து செய்வதை நிறுத்தாதவரை, இந்தியா, சீனா இடையிலான நேரடி விமான சேவை தொடங்குவது எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பயணிகள் சிலருக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், திட்டமிட்ட விமானங்களை திடீரென எவ்வித முன்னறிப்பின்றி சீன அரசு ரத்து செய்வதை நிறுத்தாதவரை, இந்தியா, சீனா இடையிலான நேரடி விமான சேவை தொடங்குவது எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியா, சீனா இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
சீனாவை கலங்கவைக்கும் ஓமைக்ரான் வைரஸ்:புதிய வகைகள் கண்டுபிடிப்பு: ஒரேநாளில் 2,000 பேர் பாதிப்பு
விமான சேவை நிறுத்தப்பட்டதால் சீனாவில் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்திய மாணவர்கள், வேலை செய்யும் இந்தியர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் மீண்டும் செல்வதில் பெரிய சிரமத்தைச் சந்தித்தனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த சீனா, சமீபத்தில் அந்தத் தடையை விலக்கியது
சீனாவின் கொரோனா கட்டுப்பாடுகளில் அந்நாட்டில் மருத்துவம் படித்த 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப முடியாமலும், அங்கு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாமல் பெரிய சிரமகங்களைச் சந்தித்தனர்.
அமெரிக்க பெடரல்வங்கி முன்னாள் தலைவர் உள்பட 3 அறிஞர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு
அது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே நேரடியான விமான சேவையும் இல்லை, மூன்றாவது நாட்டுக்குச் சென்று அங்கிருந்துதான் சீனா செல்லவேண்டிய இக்கட்டான நிலையை இந்தியர்கள் சந்தித்தனர். இதனால் அதிகமான காலநேரமும், பணவிரயமும் ஏற்பட்டது
இருப்பினும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் 3வது நாட்டின் மூலம் அதாவது ஹாங்காங் சென்று அங்கிருந்து டிரான்சிஸ்ட் விசா மூலம் கடந்த சில வாரங்களாக சீனா சென்றனர்.
இந்தியா-சீனா இடையே நேரடியான விமான சேவை இன்னும் தொடங்காததால், சீனா செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இந்தியர்கள் ஹாங்காங் சென்று அங்கிருந்து சீனா செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து இ்ந்தியர்கள் சீன விமானத்தில் சீனாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றாலும், அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டபின்புதான் வெளியே வர முடியும்.
ஹாங்காங் வழியாக சீனா செல்ல முடியாத இந்தியர்கள், இந்தியாவிலிருந்து இலங்கை, நேபாளம், மியான்மர் வழியாக சீனா செல்கிறார்கள். இப்போதுள்ள சூழலில் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் ஜீரோ கோவிட் என்ற கொள்கையில் இருந்து சீன மாறுவதாக இல்லை.
வரும் 16ம் தேதி சீனாவின் தேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடங்க இருக்கும் சூழலிலும் ஜீரோகோவிட் கொள்கையில் பிடிவாதமாக அந்நாடுஇருக்கிறது. கடந்த ஆண்டில் பல்வேறு நாடுகளுக்கும் ரத்து செய்யப்பட்ட விமான சேவையை கடந்த சில மாதங்களாகத்தான் சீனா மெல்ல தொடங்கி வருகிறது.
குறிப்பாக நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், தெற்காசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை தொடங்கி உள்ளது.
ஆனால் இந்த விமானச் சேவையும் உறுதியானது அல்லது. விமானநிலையத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் ஏதேனும் ஒரு பயணிக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி திட்டமிடப்பட்ட விமானங்களை சீனா ரத்து செய்துவிடுகிறது.
மீண்டும் நேரடி விமானச் சேவையைத் தொடங்க இந்தியா, சீனா அதிகாரிகள் பல மாதங்களாகப் பேச்சு நடத்தி வருகிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் பெரிதாக முன்னேற்றமில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும், கொரோனா இருப்பது பயணிக்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டால் விமான ரத்து தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை ஏற்க விமான நிறுவனங்கள் தயாராக இல்லை.
கொரோனா பரிசோதனை நடத்துவது விமான நிறுவனங்கள் அல்ல, இந்தியாவில் உள்ள சீனாவின் அதிகாரப்பூர்வ பரிசோதனை மையங்கள். இங்குள்ள சீனத் தூதரகம் பயணிகளுக்கு அனுமதி கொடுக்காமல் எந்தப் பயணியும் சீனா செல்ல முடியாது.
இந்த விவகாரத்தில் ஒரு பயணிக்கு கொரோனா இருப்பதால் அனைத்து விமானங்களைம் ரத்து செய்தால் அதன் இழப்பை விமானநிறுவனங்கள் தாங்குவது கடினம்.
ஆதலால், இப்போதுள்ள சூழலில் எதிர்காலத்தில் இந்தியா-சீனா இடையே நேரடி விமானச் சேவை தொடங்குவதில் சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன