china omicron:சீனாவை கலங்கவைக்கும் ஓமைக்ரான் வைரஸ்:புதிய வகைகள் கண்டுபிடிப்பு: ஒரேநாளில் 2,000 பேர் பாதிப்பு

By Pothy RajFirst Published Oct 11, 2022, 9:56 AM IST
Highlights

சீனாவில் ஓமைக்ரான் வைரஸின் திரிபுகளான அதிகவேகப் பரவல், மோசமான பாதிப்பை விளைவிக்கக் கூடிய பிஎப் 7, மற்றும் பிஏ 5.1.7. வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஓமைக்ரான் வைரஸின் திரிபுகளான அதிகவேகப் பரவல், மோசமான பாதிப்பை விளைவிக்கக் கூடிய பிஎப் 7, மற்றும் பிஏ 5.1.7. வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வவது தேசியஅளவிலான மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த திடீர் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு ! அச்சத்தில் உலக நாடுகள்

சீனாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் லீ சுஜியான் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ சீனாவின் பல்வேறு மாகாணங்களில் ஓமைக்ரான் வைரஸின் பிஎப் 7 வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் முதலில் சீனாவின் வடமேற்கு பகுதி நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு வகையான பிஏ 5.1.7. வைரஸ் சீனாவின் முக்கிய நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

கடந்த 4ம் தேதி முதல் பிஎப்-7 வகை ஓமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் பல்வேறு நகரங்களில் ஏராளமான மக்கள் வைரஸால்  பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பெடரல்வங்கி முன்னாள் தலைவர் உள்பட 3 அறிஞர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு

பிஎப்-7 மற்றும் பிஏ 5.1.7. வகை வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை, அதிகமான வேகத்தில் பரவக்கூடியவை என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டுக்கு மருத்துவத்துறை பேராசிரியர் ஒருவர் அளித்த பேட்டியில் “ ஓமைக்ரான் வைரஸ் பிஎப் 7 மற்றும் பிஏ 5.1.7. வகை வைரஸ்களுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை. தடுப்பு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்காவிட்டால், சீனாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை இந்த இரு வைரஸ்களும் ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

சீனாவில் பல்வேறு மாகாணங்களில் ஓமைக்ரான் வைரஸின் திரிபுகள் பரவத் தொடங்கியுள்ளதால், ஏராளமான நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா திடீர் குண்டு மழை: ட்ரோன்கள் மூலம் 75 ஏவுகணைகள் ஏவி தாக்குதல்

தலைநகர் பெஜ்யிங் நகரில் விரைவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய அளவிலான மாநாடு நடக்க இருக்கிறது. அதற்குள் கொரோனா வைரஸ் இல்லாத நகராகமாற்ற வேண்டும் என்ற நோக்கில்அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், பெய்ஜிங் நகரிலும் நேற்று 14பேருக்கு ஓமைக்ரான் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஜீரோ கோவிட் கொள்கையை விடாப்பிடியாக சீனா கடைபிடித்து வருகிறது. அதனால்தான் இன்னும் பல்வேறு நகரங்களில் லாக்டவுன், பகுதிக்கட்டுப்பாடு போன்றவை தொடர்கின்றன. இதனால் மக்கள் இன்னும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். 

மங்கோலியாவில் உள்ள சில மாநிலங்களில் கடந்த 1ம் தேதி ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஓமைக்ரான் வைரஸின் திரிபான பிஎப் 7 வகை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்துதான் சீனாவுக்கு பிஎப்7 வகை வைரஸ் பரவி இருக்கலாம் எனத் தெரிகிறது

click me!