UN Vote On Russia: ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

By Pothy Raj  |  First Published Oct 13, 2022, 9:47 AM IST

உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தமைக்கு எதிராக ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.


உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தமைக்கு எதிராக ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.

இந்தியாவில் சார்பில் கூறுகையில் “ தேசத்தின் சூழலை நன்கு உணர்ந்து சிந்தித்து நிலையான முடிவுகளை எடுத்தோம். பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கத் தயாராக இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

இந்தியா-சீனா நேரடி விமான சேவை தொடங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை

அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமும், தூதரக நடவடிக்கை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதை இந்தியா முக்கியமாகக் கொள்கிறது” எனத் தெரிவித்தது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போருக்குப்பின், உக்ரைனின் சில பகுதிகளான டோனட்ஸ்க், கெர்ஸன், லுஹன்ஸ்க், ஜபோரிஹியா ஆகியபகுதிகளை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது. 

இந்த இணைப்பு சட்டவிரோதம் என உக்ரைன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. 
இதையடுத்து, ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வரைவுத்தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது.

அதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தது சட்டவிரோதமானது எனக் கூறி ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து 'உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு: ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல்' தீர்மானம் முன்மொழியப்பட்டது. 

இந்தியாவுக்கு பாராட்டு!உலகப் பொருளாதார வளர்ச்சியை குறைத்தது செலாவணி நிதியம்(IMF)

இந்த தீர்மானத்துக்கு ஆதராவாக ஐ.நா. சபையில் 143 நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, சிரியா, நிகரகுவா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும்  தூதர் ருச்சிரா கம்போஜ் கூறுகையில் “ போரை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது. 

இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால் கொலை செய்யப்படலாம், அல்லது தற்கொலை செய்து கொள்வேன்.. நீரவ் மோடி கதறல்..

அமைதிக்கான அனைத்து ராஜாங்கரீதியான பாதைகளும் திறக்கப்படுவது அவசியம். அமைதிக்கான பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்பட்சத்தில் பதற்றம் குறையும் என நம்புகிறோம்.
 பதற்றத்தைத் தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவாக இருக்கும். இந்த தீரமானத்தில் பல விஷயங்கள் கவனிக்கப்படவில்லை. பேச்சு வார்த்தை ராஜாங்கரீதியான தீர்வு ஆகியவற்றின் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இந்தியா வாக்களிக்கும்.நாங்கள் வாக்களிக்காமல் எடுத்த முடிவு நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்

click me!