அசத்திய ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் - 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான "சீன டிராகன்" கண்டுபிடிப்பு!

By Ansgar R  |  First Published Feb 23, 2024, 8:31 PM IST

240 Million Years Old Fossil : ஸ்காட்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள், 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான "சீன டிராகன்" புதைபடிவத்தை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 16 அடி நீளமுள்ள அந்த புதைபடிவமானது ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த நீண்ட நீர்வாழ் ஊர்வனவற்றிற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 


இந்த பூமி பல கோடி ஆண்டுகளாக பல்வேறு உயிரங்களுக்கு வாழ்விடமாக இருந்து வந்தது. அப்படி வாழ்ந்து, மடிந்த உயிரினங்கள் குறித்த தகவல்கள் Fossils எனப்படும் புதைப்படிவங்களாக இப்பொது நமக்கு கிடைத்து வருகின்றது. ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள அந்த அதிசய இனம், டைனோசெபலோசொரஸ் ஓரியண்டலிஸ் என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் அதன் மிக நீளமான கழுத்து காரணமாக "டிராகன்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு ஒரு சர்வதேச குழுவால் செய்யப்பட்டது மற்றும் ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களில் இப்பொது காட்சிப்படுத்தப்படவுள்ளது.தெற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

நச்சுனு ஒரு துபாய் ட்ரிப் போக ரெடியா? Multiple Entry Visa.. வெளியான ஒரு அசத்தல் அறிவிப்பு - முழு விவரம் இதோ!

இந்த சர்வதேச குழுவின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர் நிக் ஃப்ரேசர் பிபிசியிடம் பேசும்போது, இந்த புதைபடிவமானது "மிகவும் விசித்திரமான விலங்கிற்கு" சொந்தமானது என்று கூறினார். "இது ஃபிளிப்பர் போன்ற மூட்டுகளைக் கொண்டிருந்தது மற்றும் அதன் கழுத்து அதன் உடல் மற்றும் வால் இணைந்ததை விட நீளமானது," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விலங்கு மத்திய ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த கடல் ஊர்வன டேனிஸ்ட்ரோபியஸ் ஹைட்ரைடுகளைப் போன்றது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதே போல இந்த உயிரினம் டைனோசெபலோசரஸ் கழுத்து மற்றும் உடற்பகுதியில் உள்ளது போல பல முதுகெலும்புகளை வைத்திருப்பதால், இது தனித்தன்மை வாய்ந்தது என்றும் கூறுகின்றனர். 

மேலும் அந்த உயிரினம் கடல்சார் வாழ்க்கை முறைக்கு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்ட ஒரு உயிரினம் என்று தெரிவித்துள்ளனர். புரட்டப்பட்ட மூட்டுகள் மற்றும் அதன் வயிற்றில் உள்ள எலும்புகள் மூலம் அவை புலப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். இக்குழுவில் ஸ்காட்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். 

பெய்ஜிங்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் வெர்டிப்ரேட் பேலியோண்டாலஜி மற்றும் பேலியோஆந்த்ரோபாலஜியில் பத்து வருடங்களாக அவர்கள் புதைபடிவத்தை பற்றி படித்துள்ளார். 

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் இவையே.. இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?

click me!