Dubai Visa : வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரமாகவும், பெரிய அளவில் இந்தியர்கள் விரும்பும் நகரமாகவும் திகழ்ந்து வருகின்றது துபாய் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை வரவேற்க துபாய் தயாராகி வருகின்றது என்று தான் கூறவேண்டும். இந்த முன் முயற்சியாக துபாய் இப்பொது ஐந்தாண்டு பல நுழைவு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது (5 Year Multiple Entry Visa). இந்த சேவைக்கான கோரிக்கையைப் பெற்று, இரண்டு முதல் ஐந்து வேலை நாட்களுக்குள் இந்த விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசா பெற்றவர்களை 90 நாட்களுக்கு அந்த நகரத்தில் தங்க அனுமதிக்கிறது, மேலும் அதை குறுகிய காலம் வரை நீடிக்கலாம். மொத்தமாக ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்கும் அளவிற்கு இந்த விசா பயனுள்ளதாக இருக்கும் என்று துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்தியாவில் இருந்து சுமார் 2.46 மில்லியன் சுற்றுலா பயணிகளை துபாய் வரவேற்றுள்ளது. இது 2022ம் ஆண்டில் 1.84 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற அளவை விட மிக அதிகமாகும்.
மற்றும் 2019 ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையான 1.97 மில்லியன் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் இது மிஞ்சியுள்ளது. DETயின் இந்த புதிய முயற்சியால், இன்னும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்ல ஒரு புதிய வழி பிறகும் என்றும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
DETன் சந்தைகளின் பிராந்தியத் தலைவர் படர் அலி ஹபீப் பேசுகையில், துபாய், இந்தியாவுடனான அதன் நீண்டகால உறவை மதிக்கிறது, மேலும் 2023 ஆம் ஆண்டில் சந்தையிலிருந்து அதன் உள்வரும் வருகை 'சிறந்தது', இது துபாயின் சுற்றுலாத் துறையின் சாதனைச் செயல்பாட்டிற்கு பங்களித்தது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நிறுத்தப்படும் கூகுள் பே; கூகுள் வேலட் தான் இனி..!