Corona Vaccine : இந்த டிஜிட்டல் உலகம் காணாத ஒரு மாபெரும் பெருந்தொற்று நோயை, கடந்த சில ஆடுகளாக மனிதகுலமே எதிர்கொண்டது என்றால் அது மிகையல்ல. உலக அளவில் பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கிய இந்த கொரோனா மீதான பயம் இன்றளவும் தனியவில்லை என்றே கூறலாம்.
சுமார் இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக உலகமே ஒரு முடக்க நிலையில் சிக்கித் தவித்ததற்கு ஒரே காரணம் இந்த கொரோனா தான். உலக அளவில் பல்லாயிரம் உயிர்கள் இந்த கொரோனாவால் குடிக்கப்பட்ட நிலையில் இன்றளவும் அதன் மீதான பயம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் வருகின்றது. என்னதான் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாலும் கொரோனா பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகும் பொழுது மக்கள் மத்தியில் தானாகவே ஒரு பயம் சூழ்ந்துகொள்கிறது.
இந்த வகையில் கொரோனாவிற்காக அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் முன்பில் இருந்தே பல ஆய்வுகளுக்கு தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்ட தான் வருகிறது. இந்த கொரோனா தடுப்பூசிகள் வந்த பிறகுதான் நோயின் தாக்கமும் உலக அளவில் குறைந்தது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய பாம்பு.. 26 அடி நீளம்.. 200 கிலோ எடை.. அமேசானில் கண்டுபிடிப்பு - வைரல் வீடியோ !!
இந்நிலையில் வாஷிங்டனில் சுமார் 9.9 கோடி பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் குய்லின் பார்ரோ சிண்ட்ரோம், மயோர்கார்ட்டிடிஸ், பெரிகார்டிடிஸ், போன்ற பாதிப்புகள் 1.5 மடங்கு அதிகமாக ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சிகளும் இதுகுறித்து எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஒரு தடுப்பூசியை சில ஆண்டுகள் ஆய்வுக்கு பிறகு தான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால் கொரோனா தடுப்பூசியை பொருத்தவற்றை வெகு சில மாதங்களில் அதை சோதித்து மக்களுக்கு செலுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருந்தோம்.
இந்நிலையில் இதன் காரணமாக உலக அளவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்படும் பக்க விளைவுகளின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 0.2 முதல் 0.7 சதவிகிதம் வரை கூடுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை எடுத்துக்கொண்ட 92,000 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது, இது 0.009 சதவிகிதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை; முரண்டு பிடிக்கும் சீனா; உதவிக்கு வரும் அமெரிக்கா!!