Eid-ul-Fitr 2022 moon sighting: வளைகுடா & ஐரோப்பிய நாடுகளில் மே 2 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை !!

By Raghupati R  |  First Published May 1, 2022, 5:01 PM IST

அரபுகளின் பிறை ஆண்டின் 9 வது மாதமான ரமலானை புனித மாதமாக கருதும் உலக இஸ்லாமியர்கள் அதில் பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். 


ரமலான் பிறை ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர். ​​முஸ்லீம்கள் மாதம் முழுவதும் விடியற்காலையில் இருந்து மாலை வரை நோன்பு இருப்பார்கள். அவர்கள் தங்கள் வழிபாட்டை அதிகப்படுத்தி, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

ரம்ஜானுக்குப் பிறகு ஈதுல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதால், சந்திரன் ஒரு புதிய மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 2 ஆம் தேதி பிறை பார்த்து அன்று முதல் ரமலான் நோன்பை நோற்று வருகின்றனர். இன்றுடன் அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் வானில் பிறையை பார்த்தனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து சவூதி அரேபிய அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஈத் பிறை தென்படாத காரணத்தால் ரமலான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து மே 2 ஆம் தேதி ஈகை பெருநாள் கொண்டாடப்படும் என அறிவித்து உள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளிலும் பிறை தென்படாததால் மே 2 ஆம் தேதி ஈகை திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்லாத்தில் மொத்தம் 2 பண்டிகைகள் உள்ளன. ஒன்று ஈகைத் திருநாள் என்று அழைப்படும் நோன்புப் பெருநாள். மற்றொன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

இதையும் படிங்க : நாள் குறித்த அறிவாலயம்.. அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. பரபரக்கும் கோட்டை வட்டாரங்கள் !

click me!