நாடாளுமன்ற அவையில் தான் இருமுறை ஆபாச படம் பார்த்ததாக ஒப்புக் கொண்டு, எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் எம்.பி. ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது. பாலின பாகுபாடு, பாலியல் சீண்டல்கள் குறித்து பெண் எம்.பி.-க்கள் கருத்து பகிர்ந்து கொண்டிருக்கும் போது, பெண் அமைச்சர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். மேலும் எம்.பி. ஆபாச படம் பார்த்ததை தான், பின் வரிசையில் அமர்ந்து இருந்த போது பார்த்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், நாடாளுமன்ற அவையில் தான் இருமுறை ஆபாச படம் பார்த்ததாக ஒப்புக் கொண்டு, எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் உணர்ச்சி மிகுதியில் ஆபாச படம் பார்த்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஒப்புதல்:
நாடாளுமன்ற ஸ்டாண்டர்ட்ஸ் கமிஷனரிடம், தான் செய்த காரியத்தை கடந்த வெள்ளிக் கிழமை ஒப்புக் கொண்டதை அடுத்து கன்சர்வேடிஸ் கட்சியில் இருந்து நீல் பாரிஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை அடுத்து சனிக் கிழமை இவர் ராஜினாமா செய்ததை அடுத்து, விசாரணை நடைபெறும் வரை எம்.பி.யாக தொடர்வேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
"இறுதியில் நாடாளுமன்ற கூட்டமைப்பு மற்றும் எனது குடும்பத்தில் நான் செய்யும் சேதம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதை என்னால் பார்க்க முடிகிறது. இதனை தொடரச் செய்வது அர்த்தமற்றது," என பாரிஷ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
உணர்ச்சி வேகம்:
"முன்னதாக டிராக்டர்கள் பற்றிய இணைய தேடலின் போது, ஆபாச படத்தை முதலில் பார்க்க நேர்ந்தது. பின் அதனை பார்த்தேன், ஆனால் நான் அதை செய்து இருக்கவே கூடாது. ஆனால் எனது குற்றம், மிகவும் பெரிய குற்றம் ஆகும். ஒரு முறையோடு நிற்காமல், இரண்டாவது முறையும் அதை செய்தேன். இந்த முறை மிகவும் கவனமாக வேண்டுமென்றே செய்தேன். சேம்பரின் அருகில் வாக்களிக்க காத்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் ஆபாச படம் பார்த்தேன். உணர்ச்சி மிகுதியில் இவ்வாறு செய்தேன்," என அவர் மேலும் தெரிவித்தார்.
நான் செய்து கொண்டிருந்ததை பெருமையாக கருதவில்லை. எனது அருகில் இருப்பவர்கள் அதை பார்க்க வாய்ப்புகள் உண்டு என்பதை பற்றி நான் நினைக்கவே இல்லை. நான் செய்ததை நியாயப்படுத்தப் போவதில்லை. நான் செய்தது, மிகவும் தவறான காரியம். முற்றிலும் புத்தியின்று இவ்வாறு செய்து விட்டேன்," என பாரிஷ் தெரிவித்தார்.