மாஸ்கோவின் வடகிழக்கே உள்ள இவானோவோ பகுதியில் ஒரு ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமான எஞ்சின் தீப்பிடித்ததால் விபத்து நடந்துள்ளது.
உக்ரைனிய போர்க் கைதிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளான ஒரு மாதத்தில், அதே போன்ற மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. ரஷ்ய ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியின்படி, மாஸ்கோவின் வடகிழக்கே உள்ள இவானோவோ பகுதியில் ஒரு ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
IL-76 என்ற இந்த விமானம் செவ்வாயன்று எஞ்சினில் தீப்பிடித்த நிலையில் தரையிறங்க முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகையின் எழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான எஞ்சின் தீப்பிடித்ததால் விபத்து நடந்தது என்றும் கூறியுள்ளது.
ஆழ்கடல் அதிசயம்! நட்சத்திர வடிவ வினோத விலங்கு உள்பட 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
BREAKING: Large Russian military plane crashes near Ivanovo, northeast of Moscow pic.twitter.com/di4pnpJxKh
— BNO News (@BNONews)முன்னதாக ஜனவரி மாதம், 65 உக்ரைனியர்கள், 6 விமான பணியாளர்கள் மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. போர்க் கைதிகளின் விமானத்தை உக்ரைன் சுட்டுக் கொன்றதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பெல்கொரோட் பகுதிக்கு உக்ரைனியக் கைதிகளை கொண்டு சென்றபோது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தது.
உக்ரைனியப் படைகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மூலம் விமானம் வீழ்த்தப்பட்டதாக இரண்டு மூத்த ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனால், அதற்கு ஆதாரம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் ரஷ்யாவின் கூற்றை நிராகரித்தது. ரஷ்யா தவறான தகவலை வழங்குவதாகவும் பதிலளித்தது.
உக்ரைனின் எல்லையில் இருக்கும் பெல்கொரோட் பகுதி, போரினால் அடிக்கடி தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெல்கொரோட்டில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
சீனா பக்கம் சாயும் மாலத்தீவு! எல்லையில் இருந்து வெளியேறத் தொடங்கிய இந்தியத் துருப்புகள்!