
சரி இப்பொது லண்டன் நகரில் நடந்துள்ள ஒரு அமானுஷ்யம் குறித்து பார்க்கலாம், லண்டனில் உள்ள வேல்ஸில் உள்ள ஒரு மலையில் சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமான எஃகு மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டது, இது உள்ளூர்வாசிகளையும், நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, 10-அடி உயரமுள்ள அந்த எஃகு, ஒரு மாபெரும் டோப்லெரோன் (ஒரு வகை சாக்லேட்) போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.
வார இறுதியில் போவிஸ் நகருக்கு அருகில் உள்ள ஹே பிளஃப் என்ற இடத்தில் உள்ளூர் மக்களால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "இது சற்று வினோதமானது என்றும் மற்றும் மழைநீரை சேகரிக்கும் அறிவியல் ஊடக ஆராய்ச்சி விஷயமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்" என்று ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் வேல்ஸ் ஆன்லைனில் கூறினார்.
"ஆனால் அது மிகவும் உயரமானது மற்றும் விசித்திரமானது என்பதை பின்னரே உணர்ந்தேன். அதன் அருகில் சென்றபோது, அது குறைந்தபட்சம் 10-அடி உயரமாகவும் முக்கோண வடிவில் இருப்பதையும் பார்த்தேன். கண்டிப்பாக துருப்பிடிக்காத எஃகு. அது என்று எனக்கு தெரியவந்தது. இரண்டு பேர் அதை எடுத்துச் சென்று தரையில் நடுவதற்கு போதுமான அளவில் அது எடையை கொண்டிருந்ததாக,” திரு ஹெய்ன்ஸ் மேலும் கூறினார்.
வைரலாகி வரும் அந்த மோனோலித்தின் படங்கள் ஆன்லைனில் பல கோட்பாடுகளை தூண்டிவிட்டன. இது வேற்றுகிரகவாசிகளின் வேலை என்று பலர் கூறினாலும், மற்றவர்கள் இது ஒரு விரிவான ரகசிய கலைப்படைப்பு என்று நம்பினர். ஆனால் இதுபோன்ற ஒரு பொருள் தோன்றுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கண்டத 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற உலோக பொருட்கள் காணப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த மர்ம பொருள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இது மனிதர்களின் வேலையா? அல்லது சிலர் நம்புவதை போல ஏலியன்களின் செயல் தானா என்பது புலப்படவில்லை.