Indian Woman in Australia : ஹைதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த 36 வயது பெண், ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 36 வயது பெண் ஆஸ்திரேலியா நாட்டில் வசித்து வந்த நிலையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் அவரைக் கொன்றதாகக் கூறப்படும் இறந்த அந்த பெண்ணுடைய கணவர், விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு வந்து தங்கள் குழந்தையை, இறந்த அந்த பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தை சேர்ந்த சைதன்யா மதகனியின் உடல் கடந்த சனிக்கிழமையன்று அன்று ஆஸ்திரேலியாவின் பக்லியில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் இருந்த தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
உப்பல் எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டியின் கூற்றுப்படி, அந்த பெண் தனது தொகுதியை சேர்ந்தவர் என்பதால், இந்த விஷயம் குறித்து தெரிவிக்கப்பட்ட பின்னர் அவர் இன்று அவரது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண்ணின் பெற்றோரின் வேண்டுகோளின் பேரில், அந்தப் பெண்ணின் உடலை ஹைதராபாத்துக்குக் கொண்டு வர வெளியுறவு அலுவலகத்துக்கு கடிதம் எழுதியதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் அலுவலகத்திற்கும் தெரிவித்ததாகவும் அந்த எம்எல்ஏ கூறினார். மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த தகவலின்படி, தங்கள் மகளை கொன்றதை அந்த மருமகன் ஒப்புக்கொண்டதாகவும் எம்எல்ஏ கூறினார். ஆனால் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
விக்டோரியா காவல்துறை கடந்த மார்ச் 9 தேதியிட்ட அறிக்கையில், "இறந்த நபர் வின்செல்சியாவுக்கு அருகிலுள்ள பக்லியில் இருந்ததை அடுத்து கொலைப் பிரிவு துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் இறந்த நபரை மவுண்ட் பொல்லாக் சாலையில் மதியம் கண்டுபிடித்தனர்" என்று கூறப்படுகிறது.
71வது உலக அழகி போட்டி: பட்டத்தைத் தட்டிச் சென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா!