Pilots Fell Asleep : விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் தூங்கியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
விமானம் ஓட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயங்களில் ஒன்று, அப்படி இருக்க, இரு விமானிகள் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது தூங்கியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. தென்கிழக்கு சுலவேசியில் இருந்து ஜகார்த்தாவிற்கு பறக்க தேவைப்படும் 2 மணி 35 நிமிட பயணத்தில் இந்தோனேசிய விமான நிறுவனமான பாடிக் ஏர் விமானி மற்றும் துணை விமானி கிட்டத்தட்ட அரை மணி நேரம் தூங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி, 2024 அன்று நடந்த இந்தச் சம்பவம், அந்த விமான நிறுவனத்திற்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் இந்தோனேசியப் போக்குவரத்து அமைச்சகத்தின் விசாரணைக்கு விமானிகள் மற்றும் விமானக் குழுவினரின் ஓய்வு தரம் குறித்து மார்ச் 9, 2024 அன்று விமான நிறுவனம் மீது விசாரணை நடத்த வழிவகுத்துள்ளது.
என்ன கண்றாவி.. இந்த வீட்டு வாடகை ரூ.2 லட்சமா.. என்னடா இது அமெரிக்காவுக்கு வந்த சோதனை..
விமானியும் துணை விமானியும் ஜகார்த்தாவில் உள்ள தங்கள் விமான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பாடிக் ஏர் விமானமான BTK6723ல் சுமார் 28 நிமிடங்கள் தூங்கினர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு, கேப்டன், துணை விமானியிடம் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி கேட்டுள்ளார்.
அதன் பிறகு ஏற்கனவே வீட்டில் தனது ஒரு மாத இரட்டைக் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் மனைவிக்கு உதவிய துணை விமானியும், கவனக்குறைவாக தூங்கியுள்ளார். ஜகார்த்தாவில் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மையம் விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் அதற்கு விமானிகளிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
சுமார் 28 நிமிடங்களுக்குப் பிறகு, விமானி எழுந்துள்ளார். பின் விமானம் சரியான விமானப் பாதையில் இல்லை என்பதை உணர்ந்துள்ளார். அவர் உடனடியாக தனது துணை விமானியை எழுப்பி, ஜகார்த்தாவில் இருந்து வந்த அழைப்புகளுக்கு பதிலளித்து, விமானப் பாதையை சரி செய்துள்ளார். அந்த விமானத்தில் இருந்த 153 பயணிகள் மற்றும் நான்கு விமான பணிப்பெண்கள் பத்திரமாக தரையிறங்கினர். தற்போது அந்த இரு விமானிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
50 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் கோகோ கோலாவை மட்டுமே குடிக்கும் நபர்.. இப்போது எப்படி இருக்கிறார்?