என்ன கண்றாவி.. இந்த வீட்டு வாடகை ரூ.2 லட்சமா.. என்னடா இது அமெரிக்காவுக்கு வந்த சோதனை..

By Raghupati R  |  First Published Mar 10, 2024, 8:52 AM IST

மோசமான வடிவமைக்கப்பட்ட நியூயார்க் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் ஒன்று ரூ. 2 லட்சம் வாடகைக்கு விற்கப்படுவதாக இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது இணையவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனின் நோலிடா மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ. 2 லட்சத்திற்கு பட்டியலிடப்பட்ட ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்பைக் காண்பிக்கும் வைரலான வீடியோ இணைய பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரியல் எஸ்டேட் வியாபாரி டேவிட் ஒகோச்சாவால் பகிரப்பட்ட இந்த வீடியோ, 3.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.

இது தற்போதைய வீட்டு நெருக்கடி குறித்த கவலையை அதிகரிக்கிறது. அதில், பார்வையாளர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை தூண்டியது என்றே கூறலாம். "நீங்கள் இதுவரை பார்த்திராத மிக மோசமான இட வடிவமைப்பு இதுதானா?" என்ற கேள்வியுடன் தலைப்பிடப்பட்ட வீடியோ குறித்து ஒரு நபர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

Tap to resize

Latest Videos

அதில், "நீங்கள் இங்கு வாழ்வதால் ஏற்படும் மனச்சோர்வின் காரணமாக அந்த விலை சிகிச்சைக்கு அதிகம் மிச்சமிருக்காது" என்று பதிவிட்டார். மற்றொரு பயனர், "ஒரு நில உரிமையாளராக, இது சட்டவிரோதமானது. இந்த நில உரிமையாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறினார். பார்வையாளர்கள் சமையலறைக்கு அருகாமையில் ஷவர் இருப்பதைக் குறிப்பிட்டனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Realtor (@ocr_realty)

ஒரு மெல்லிய பிளாஸ்டிக் தாளால் மட்டுமே பிரிக்கப்பட்டது. கூடுதலாக, ஒரு கழிப்பறை இருக்கை வசதியற்ற முறையில் கைகழுவுவதற்கு இல்லாமல் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க் நகரத்தில் மலிவு விலை வீடுகளின் டிமாண்டை காட்டுகிறது என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள். முன்னதாக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓமர் லாபாக், மன்ஹாட்டனில் உள்ள “மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்பு” என்று விளம்பரம் செய்திருந்தது.

இது ஒரு மாதத்திற்கு $1200 வாடகை, தோராயமாக இந்திய மதிப்பில் ₹ 99,482 ஆகும். சில நியூயார்க் கட்டிடங்கள் குளியலறைகள் அல்லது சமையலறைகள் இல்லாமல் ஒற்றை அறை ஆக்கிரமிப்புகள் (SROக்கள்) என அழைக்கப்படும் சிறிய ஸ்டுடியோக்களை வழங்குகின்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!