கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல், கோகோ கோலாவை மட்டுமே குடிக்கும் நபர் இப்போது எப்படியுள்ளார் என்பதை பார்க்கும் போது, அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
மனிதன் உயிர் வாழ்வதற்கு குடிநீர் இன்றியமையாதது. மக்கள் தண்ணீர் அருந்தாமல் மூன்று நாட்கள் உயிர் வாழ முடியும் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் உயிருடன் இருக்கும் ஒருவரை பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருக்க மாற்றீர்கள்.
பிரேசிலின் பாஹியாவைச் சேர்ந்த ராபர்ட் பெட்ரீரா, கடந்த 50 ஆண்டுகளாக கோகோ கோலா குடித்து மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார். Oddity Central News இன் அறிக்கையின்படி, 70 வயதான ஓய்வு பெற்றவர். இவர் சந்தேகத்திற்கு இடமின்றி கோக்கின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். அவர் நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இதுபோன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை அனுபவித்தாலும், அவர் இன்னும் கோகோ கோலாவைக் குடிக்க விரும்புகிறார். மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, இந்த நோய்க்கு மட்டும் மருந்து சாப்பிடுங்கள் என்று மருத்துவர்களிடம் கூறியபோது அவருக்கு கோக் மீதான மோகம் உண்மையாகவே வெளிப்பட்டது.
அப்போதும் அவர் மருந்தை தண்ணீருடன் கலந்து குடிக்காமல் கோக் உடன் கலந்து மருந்து குடித்தார். அவரது இதயத்தில் 6 ஸ்டென்ட்கள் போடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கோக் மட்டும் குடிப்பதில் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது.
E meu padrinho que o ÚNICO líquido que ele bebe há mais de 30 anos é Coca Cola. Sim, ele não bebe nenhum outro líquido que não seja Coca Cola, nem água. A imagem da direita não me deixa mentir pic.twitter.com/s8cAqn719Z
— João Victor 🃏 (@ijoaovv)ராபர்ட்டின் கதையை மக்கள் நம்புவது மிகவும் கடினமாக இருந்தபோதிலும், அவரது 27 வயது பேரன் தனது தாத்தா தண்ணீர் குடிப்பதை பார்த்ததில்லை என்பதை வெளிப்படுத்தினார். அப்போதுதான் உலகம் அதை நம்பத் தொடங்கியது. சமூக ஊடகங்களில் வைரலான ராபர்ட்டின் கதை, மக்களை மேலும் கவர்ந்து வருகிறது.
ரூ.69,000க்கு அறிமுகம் செய்யப்பட்ட கோமாகி ஃப்ளோரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இவ்வளவு வசதிகள் இருக்கு..