ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் மீத இனவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு, உடலில் 11 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் மீத இனவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு, உடலில் 11 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டார்.
மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரைக் காண அவரின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விசா கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
29 வயதான இந்திய மாணவர் பெயர் சுபம் கார்க். இவர் சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிடெக் மற்றும் எம்எஸ்சி முடித்து டாக்டர் பட்டத்துக்காக ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் சென்றார்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி: பிரிட்டிஷ் ஆட்சியில்கூடஇப்படி இல்லீங்க ! கெஜ்ரிவால் குமுறல்
சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற சுபம் கார்க் படித்து வருகிறார்.கடந்த 6ம் தேதி வெளியே சென்ற சுபம் கார்க் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி, அவரை 11 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கிடந்த அவரை போலீஸார் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
சுபம் கார்க் சுயநினைவுக்கு வந்தபின்புதான் அவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரியவரும்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரைச் சேர்ந்த சுபம் கார்க் குறித்து பெற்றோர்கள் கூறுகையில் “ சுபம் கார்கை அடையாளம் தெரியா நபர்கள் அவரின் முகம், மார்பு, அடிவயிறு ஆகிய 11 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர்.
இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடங்கள்: மத்தியப்பிரதேசத்தில் அமித் ஷா அறிமுகம் செய்கிறார்
இதுவரை 27 வயதான ஒருவரை மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் கைது செய்திருப்பதாக கூறினார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள சுபம் கார்க் நண்பர்களிடம் பேசியதில் இது இனவெறித் தாக்குதல். இது தொடர்பாக இந்தியத் தூதரகத்திடம் தெரிவித்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் ஆஸ்திரேலியா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்து ஒருவாரம் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.
கணவரென்றும் பாராமல் வெளுத்த மனைவி! காதலியுடன் ஷாப்பிங் சென்று சிக்கிக்கொண்டார்: வைரல் வீடியோ
ஆக்ரா மாவட்ட ஆட்சியர் நவ்நீத் சாஹல் நிருபர்களிடம் கூறுகையில் “ சுபம் கார்க் பெற்றோரின் விசா செயல்பாட்டில் இருக்கிறது. வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறேன், சிட்னியில்உள்ள அதிகாரிகளிடமும் பேசி வருகிறேன். விரைவில் விசா கிடைத்துவிடும்” எனத் தெரிவித்தார்