China: Xi Jinping: 3வது முறையாக அதிபரா? ஜி ஜின்பிங்கிற்கு சீனாவில் எதிர்ப்பு! பேனர் வைப்பு !

By Pothy RajFirst Published Oct 14, 2022, 10:54 AM IST
Highlights

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வரும் 16ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் 3வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் பதவிக்குவரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் பெய்ஜிங்கில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வரும் 16ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் 3வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் பதவிக்குவரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் பெய்ஜிங்கில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 16ம் தேதி பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில், சீனாவில் உள்ள அனைத்து மாகாணத்திலிருந்தும் 2300 உறுப்பினர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டிலும் சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில், சீன அதிபராக ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக அதிபராக வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சீன அதிபர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் வெளியேற வேண்டும், துரோகி, கொரோனா கட்டுபாடுகளை குறைக்க வேண்டும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

வருமானவரி விலக்கு குறைப்பு: தனிநபர்வரி, கார்ப்பரேட் வரியை உயர்த்தியது இலங்கை அரசு

ஒரு பேனரில் “ எங்களுக்கு கோவிட் பரிசோதனை வேண்டாம், நாங்கள் சாப்பிட வேண்டும், லாக்டவுன் தேவையில்லை, சுதந்திரம் தேவை” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதிபராக ஜி ஜின்பிங் வந்ததில் இருந்து அவருக்கு எதிராக இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டது இல்லை. ஆனால் சீன கம்யூனிஸ்ட் மாநாடு நடக்க இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக இதுபோன்ற கிளர்ச்சி கிளம்பியுள்ளது.

சீனா கடைபிடிக்கும் தீவிரமான கொரோனா கட்டுப்பாடு கொள்கையால் அந்நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மக்களின் வாழ்வாதாரமும் சிதைந்துள்ளது. இந்த அதிருப்தி சீன முழுவதும் மக்களிடம் அதிகரித்துள்ளது.

சீன அதிபருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், சுவரொட்டிகள் குறித்து பெய்ஜிங் போலீஸார் மற்றும் பெய்ஜிங் நகரநிர்வாகத்திடம் வீசாட் மூலம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அது குறித்து அவர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டத்தின்படி ஒருவர் ஒருமுறைதான் அதிபராக வர முடியும்.ஆனால், ஜி ஜின்பிங் கடந்த முறை நடந்த மாநாட்டில் 2வது முறையாக கட்சியின் பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் ஜின்பிங் வந்து தனக்கு ஏற்றார்போல் சட்டத்திருத்ததை செய்தார். அது மட்டுமல்லாமல் சீனாவில் எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் செய்யவும், அதன் அதிகாரத்தைக் குறைத்து, ஒரு கட்சி, ஒரு  அதிபர் என்ற முறையையும் கொண்டுவர ஜி ஜின்பிங் திட்டமிட்டுள்ளார்.

ஏழைகளுக்கு உதவுங்கள்!உலக பொருளாதாரம் ஆபத்தான மந்தநிலைக்கு செல்கிறது:உலக வங்கி எச்சரிக்கை

அதற்கான முன்னெடுப்புகள் அனைத்தும் வரும் 16ம்தேதி தொடங்கும 20வது சீன கம்யூனிஸ்ட் மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் தொடங்குவார் எனத் தெரிகிறது. எந்தவிதமான பத்திரிகையாளர்களுக்கும் அனுமதியில்லாமல் பூட்டிய அறைக்குள் சீன கம்யூனிஸ்ட் கட்சிமாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கும் 2300 உறுப்பினர்கள், மத்திய குழுவுக்கான 200 உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். அந்த 200 உறுப்பினர்கள் பொலிட் பியூரோவுக்கான 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள்.

கடந்த 2017ம் ஆண்டு சீனாவில் 2வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பேசுகையில் “ சீனா தனது கதவுகளை உலகிற்கு அடைக்காது. திறந்தகதவுகளுடன், தடையின்றி செயல்படலாம். வெளிப்படையாக இருந்தால்தான் வளர்ச்சி வரும். தனிமைப்படுத்துதல் ஒருவரையும், ஒரு தேசத்தையும் பின்நோக்குதள்ளும்”எ ன்று முற்போக்குத்தனமாகப் பேசினார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நடந்தவை அனைத்து ஜிங்பிங் பேசியதற்கு எதிராகவே நடந்தது.

இலங்கையில் 3 ஆண்டுகளில் 2 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துக்கு திரும்பிவிட்ட நிலையில் சீனாவில் இன்னும் கொடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு மக்களை அரசு வாட்டி எடுக்கிறது. மக்களின் கடும் அதிருப்திக்கு மத்தியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வரும் 16ம் தேதி தொடங்குகிறது

click me!