World Bank:recession: ஏழைகளுக்கு உதவுங்கள்!உலக பொருளாதாரம் ஆபத்தான மந்தநிலைக்கு செல்கிறது:உலக வங்கி எச்சரிக்கை

By Pothy RajFirst Published Oct 14, 2022, 7:05 AM IST
Highlights

உலகப் பொருளாதாரம் ஆபத்தான மந்தநிலைக்கு அருகே சென்றுவிட்டது. ஏழைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு உதவுங்கள் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் எச்சரித்துள்ளார்.

உலகப் பொருளாதாரம் ஆபத்தான மந்தநிலைக்கு அருகே சென்றுவிட்டது. ஏழைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு உதவுங்கள் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன் நகரில் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியத்தின் ஆண்டுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் நிதிஅமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் நேற்று பேசியதாவது:

பொருளாதாரத்தில் வலுவாக மீண்டு வரும் இந்தியா... உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கருத்து!!

உலகப் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்து வருகிறது, வரும் 2023ம் ஆண்டில் முன்பு கணித்த 3 சதவீதத்திலிருந்து குறைந்து 1.9 சதவீதமாகக் குறைகிறது. உலகம் ஆபத்தான பொருளதார மந்தநிலைக்கு அருகே செல்கிறது. உறுதியில்லாத சூழல்களால், நிச்சயமாக உலக பொருளாதார மந்தநிலை உருவாகலாம்.

இந்த கூட்டத்தில் வந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்திருப்பார்கள். உலக நாடுகளில் எழுந்துள்ள பணவீக்க பிரச்சினை, மத்திய வங்கி வட்டிவீதத்தை உயர்த்தி வருவது, முதலீடு நாட்டை விட்டு வெளியேறுவது ஆகியவை பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன, அதிலும் வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் உலக வங்கிக்கு பெரிய சவாலாக இருக்கிறது

கொரோனா காலத்தில் ஏழைகளுக்கான உதவி அற்புதமானது: இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு

வளரும் நாடுகளில் மக்கள் முன்னேற உதவுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சில நாடுகள் ஏற்கெனவே வட்டி வீதத்தை உயர்த்தி உச்ச கட்டத்தை எட்டிவிட்டன இனிமேல் வட்டியை உயர்த்த முடியாத நிலைக்கு வந்துவிட்டன. சில நாடுகள் ஒருவிதமான மானியத்துக்குப் பதிலாக வேறுவிதமான மானியத்தை வழங்குகின்றன.

world bank: recession: உலகப் பொருளாதார மந்தநிலை 2023ல் உருவாகலாம்: உலக வங்கி எச்சரிக்கை

வளரும் நாடுகளுக்கு கடன், அதிகமான வட்டி செலுத்துதல் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. அந்த நாடுகளின் கரன்சிக்களும், டாலருக்கு எதிராக பலவீனமடைந்துவிட்டன. கரன்சிக்களின் மதிப்பு சரிவதும், கடன் சுமையை அதிகப்படுத்தும், வளரும் நாடுககளில் கடன்பிரச்சினை 5வது அலையாக இருக்கிறது
இவ்வாறு மால்பாஸ் தெரிவித்தார்

click me!