பப்பில் இருந்து வேளை செய்யும் வொர்க் ஃப்ரம் பப் என்ற புதிய முறை இங்கிலாந்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
பப்பில் இருந்து வேளை செய்யும் வொர்க் ஃப்ரம் பப் என்ற புதிய முறை இங்கிலாந்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிவைத்தது. இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரடங்கு, மாஸ்க் அணிவது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் பல பெரு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வொர்க் ஃப்ரம் ஹோம்( வீட்டிலிருந்து பணியாற்ற) அனுமதித்தது.
இதையும் படிங்க: தண்ணீரை சேமிக்க புதிய யோசனை… இணையத்தில் வைரலாகும் ஜப்பானிய கழிவறை!!
இந்த நிலையில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தியதோடு அதன் பரவலும் குறைந்துள்ளது. இதை அடுத்து பெரு நிறுவனங்கள் பல வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு வர அழைப்பு விடுத்தது. மேலும் சில நிறுவனங்கள் குறைந்தது வாரத்துக்கு 3 நாட்களாவது அலுவலகத்துக்கு வருமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே தற்போது புதிய முறை ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. இங்கிலாந்தில் வொர்க் ஃப்ரம் பப் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஊழியர் ஒருவர் பாரிலேயே மடிக்கணினியுடன் சென்று நாள் முழுவதும் வேலை செய்யலாம்.
இதையும் படிங்க: வருமானவரி விலக்கு குறைப்பு: தனிநபர்வரி, கார்ப்பரேட் வரியை உயர்த்தியது இலங்கை அரசு
பொதுவாகவே ஸ்டார் பக்ஸ் போன்ற பெரிய காபி ஷாப்கள் தங்களது வளாகத்தில் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. அதிக நேரம் அங்கு செலவிடும் போது, அதிக வியாபாரமாகும் என்பது தான் வியபார யுக்தி. இதை அடுத்து தங்கள் பப்புக்கு வரும் ஒரு கார்பரேட் நிறுவனத்தின் ஊழியரை நன்றாக கவனித்துக்கொள்வதில் பார்கள் கவனம் செலுத்துகின்றன. சில பார்கள் இதனை முக்கிய வியாபார உத்தியாக கொண்டிருக்கின்றன. சில பிரபலமான பப்கள், வொர்க் ஃப்ரம் பப் முறையை அதிக அளவில் விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்த முறையை ஊழியர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் இது தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.