Queen Elizabeth-II funeral:ராணி 2ம் எலிசபெத் உடல் இன்று அடக்கம்: இறுதிச்சடங்கு பற்றி அறிய வேண்டிய அம்சங்கள்

By Pothy RajFirst Published Sep 19, 2022, 1:00 PM IST
Highlights

பிரிட்டனின் நீண்டகாலம் ராணியாக இருந்த ராணி 2ம் எலிசபெத் மறைந்ததயடுத்து, 10 நாட்களுக்குப்பின் அவரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் இன்று நடக்கின்றன. 

பிரிட்டனின் நீண்டகாலம் ராணியாக இருந்த ராணி 2ம் எலிசபெத் மறைந்ததயடுத்து, 10 நாட்களுக்குப்பின் அவரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் இன்று நடக்கின்றன. 

பிரிட்டனில் நீண்டகாலம் ராணியாக இருந்த 2ம் எலிசபெத்(வயது96) ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் கடந்த 8ம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் 10 நாட்களுக்குப்பின் இன்று நடக்கிறது. 

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு கொண்டுவரப்பட்டநிலையில், அஞ்சலிசெலுத்தும் அனைத்து நிகழ்வுகளும் நேற்று முடிந்துவிட்டன. 

ராணி எலிசபெத் உடல் நாளை நல்லடக்கம்... உலகத் தலைவர்கள் வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

இதையடுத்து, இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு மேல் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கி ஒரு மணிநேரம் நடக்கும்.

அதன்பின், லண்டனில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக குதிரை பூட்டப்பட்ட வண்டியில் பக்கிங்ஹாம்அரண்மனைக்கு அருகே இருக்கும் வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளை மக்கள் பார்க்கும் வகையில் 123 இடங்களில் மிகப்பெரிய திரையை பிரிட்டன் அரசு வைத்துள்ளது. 

57 ஆண்டுகளுக்குப்பின்

லண்டனில் அரச குடும்பத்தில் 57 ஆண்டுகளுக்குப்பின் அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கு இதுதான். கடைசியாக 1965ம் ஆண்டு கடைசியாக வின்ஸ்டன் சர்ச்சில் மறைவின்போது இறுதிச்சடங்கு நடந்தது.

வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அடுத்த இறுதி சடங்கு.. சர்ச்சையில் சிக்கிய ஹாரி - மேகன் தம்பதி - அடுத்தடுத்து பரபரப்பு!

ராணியின் உடல் எங்கு அடக்கம்

ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி இங்கிலீஸ் ஓக் மரத்தால் செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டதாகும். இந்த சவப்பெட்டி ராயல் வால்ட் என்று அழைக்கப்படும் விண்ட்சார் கோட்டைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதாள அடக்க அறையில் வைக்கப்படும். இங்கு நடக்கும் பிரார்த்தனையில் மன்னர் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்பார்கள்.

19-ம்நூற்றாண்டு

கடந்த 1475ம் ஆண்டு பிரிட்டனை ஆண்ட 3ம் மன்னர் எட்வார், அரச குடும்பத்தினர் யாரேனும் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்ய ஜார்ச் சேப்பல் பகுதியை தேர்ந்தெடுத்தார். 19ம் நூற்றிண்டிலிருந்து அரச குடும்பத்தினர்இங்குதான் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

ராணி எலிசபெத் சவப்பெட்டிக்குள் என்ன வைக்கப்படும்

ராணி 2ம் எலிசபெத் சவப்பெட்டிக்குள் அவரின் தனிப்பட்ட கொடி, ராயல் ஸ்டான்டர்ட் கொடி, அரச குடும்பத்தின் கிரீடத்தில் இருக்கும் ஆர்ப் மற்றும் ஸ்செப்டர் என்ற விலை உயர்ந்த கற்களும் வைக்கப்படும். 

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!!

இறுதிச்சடங்கில் எந்தெந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்?

இந்தியாவிலிருந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார். லண்டன் சென்ற குடியயரசுத் தலைவர் முர்மு நேற்று மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசினார். 

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனின் மூத்த அரசியல் தலைவர்கள்,அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துருக்கி அதிபர் ரிசீப் எர்டோகன், ஜப்பான் அரசர் நருஹிட்டோ, நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டரென், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்  உர்சுலா வான்டர் லேயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைக்கப்படவில்லை.

click me!