taiwan: earthquake: தைவானை உலுக்கும் பூகம்பம்: இதுவரை 70 நில அதிர்வுகளால் மக்கள் பீதி, சாலையில் தஞ்சம்

By Pothy Raj  |  First Published Sep 19, 2022, 10:55 AM IST

தைவானின், தென்கிழக்கில் உள்ள டாய்டங் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 70 சிறிய நிலஅதிர்வுகள்(ஆப்டர்ஷாக்ஸ்) ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.


தைவானின், தென்கிழக்கில் உள்ள டாய்டங் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 70 சிறிய நிலஅதிர்வுகள்(ஆப்டர்ஷாக்ஸ்) ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

இன்னும் அடுத்துவரும் நாட்களில் அதிகமான ஆஃப்டர் ஷாக் ஏற்படும் என்று தைவான் புவியியல் அமைப்பு எச்சரித்துள்ளது.

நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

தைவானின் வடகிழக்கில் உள்ள டைடங் மாகாணத்தில் உள்ள சிசாங் நகரில்  நேற்று பிற்பகல் 2.44 மணி அளவில் பூமிக்கு கீழ் 7.கி.மீ ஆழத்தில்  6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம் ஏற்பட்டது. சனிக்கிழமை குவான்ஷான் நகரில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும், ஹூலியன் மாகாணத்தில் உள்ள சிசாங், யூலி நகரிலும் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். தைவானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இன்று காலை வரை 70 சறிய நிலஅதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன. இந்த ஆப்டர்ஷாக்கில் அதிகபட்சமாக 5.9ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 27 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி! 20 பேர் படுகாயம்

இன்று காலை 10 மணி அளவில்(உள்ளூர்நேரப்படி) ஹூலியன் மாகாணம், ஹூவோக்சி நகரில் ரிக்டர் அளவில் 5.9 அளவி்ல பூகம்பம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டுக்குள் செல்ல அஞ்சி சாலையிலும், திறந்த வெளியிலுமே தங்கியுள்ளனர். அடுத்துவரும் 3 அல்லது 4 நாட்களுக்கு இதுபோன்று தொடர்ந்து பூகம்பம் ஏற்படும் என்று பூவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனத் தெரியவில்லை.  அங்குள்ளஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி 146 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. 

கிழக்கு தைவானில் உள்ள டோங்கிலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் பூகம்பத்தால் தடம் புரண்டன. சிக்கி மற்றும் லூயிசி மலைப்பகுதியில் பூம்பத்தால் பாறைகள் உருண்டு விழுந்ததால் ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளன. யாருக்கும் காயமில்லை என்றாலும், மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

சீனாவில் 42 மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !கரும்புகை,விண்ணை முட்டிய தீ பிளம்பு வீடியோ

அடுத்த சில நாட்களுக்கு ஆஃப்டர் ஷாக் ஏற்படும் என்று நிலவியல் வல்லுநர்கள் எச்சரித்திருப்பதால், மக்கள் வீடுகளுக்குள் செல்லத் தயங்குகிறார்கள்.  2016ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1999ம் ஆண்டு பூகம்பத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!