சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நாளன்று பொது விடுமுறை! - மனித வளத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

By Dinesh TG  |  First Published Aug 22, 2023, 4:19 PM IST

சிங்கப்பூரில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றை நாள் பொது விடுமறை நாளாக மனிவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 


தற்போதைய சிங்கப்பூர் அதிபர் Halimah binti Yacob பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட 3 பேர் தகுதி பெற்றுள்ளதாக சிங்கப்பூர் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

அவர்கள், GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் ஆவர்.

இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள செப்டம்பர் 1-ம் தேதி பொது விடுமுறையாக மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பெரிய பெரிய நிறுவனங்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்தல்நாளை மற்ற பொது விடுமுறையைப் போன்று கருதி அனைவருக்கும் வாக்களிக்க உரிமை அளிக்க வேண்டும் என மனித வளத்துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட 3 பேர் தகுதி! வேட்புமனு தாக்கல் செய்ய அழைப்பு!

மேலும், பணி நியமனச் சட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை கொடுக்கப்படவேண்டும் என்றும், பொது விடுமுறை நாளன்று ஊழியர்கள் பணி செய்ய வேண்டியிருந்தால், அன்றைய பணிக்காக கூடுதலாக ஒரு நாள் சம்பளம் தரப்படவேண்டும் அல்லது அதற்குப் பதிலாக ஒரு நாள் விடுப்பு வழங்கப்படவேண்டும் என்றும் மனித வளத்துறை அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மறுசீரமைக்கப்படும் லிட்டில் இந்தியா வட்டார பகுதிகள்! - சிங்கப்பூர் நில ஆணையம் தகவல்

சிங்கப்பூர்.. Girl Friendஐ வழியனுப்ப 55 வயது நபர் செய்த பலே வேலை - லபக்கென்று பிடித்து கைது செய்த போலீசார்!

click me!