எங்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள்.. காரணம் என்ன தெரியுமா? சீக்ரெட் சொன்ன முன்னாள் அமைச்சர் சண்முகரத்தினம்!

By Ansgar R  |  First Published Aug 22, 2023, 8:37 AM IST

சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மிக விரைவில் வரவுள்ளது, அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகின்றார்.


அந்த வகையில் சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களை சிரிக்கவைக்கும் வகையில் தமாஷாக தனது வாழ்க்கை பயணத்தை பற்றி பேசியுள்ளார். 66 வயதான சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர், தானும் தனது மனைவி ஜேன் இட்டோகியும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்தபோது சில ஆராய்ச்சிகளை செய்யத் துவங்கியதாக கூறினார். 

ஆப்பிரிக்காவில் உள்ள யோருபா என்ற பழங்குடி இன மக்கள் பற்றி தாங்கள் படித்ததாகவும், அந்த யோருபா பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதை தாங்கள் கண்டுபிடித்தாகவும் தர்மன் கூறினார். அந்த இன மக்களிடையே அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்க பெரிய அளவில் காரணமாக இருந்தது யாம் தான் என்றும் இறுதியில் கண்டறிந்துள்ளனர். யாம் என்றால் சேனை கிழங்கு.

Tap to resize

Latest Videos

undefined

பிஞ்சுக் குழந்தைகளை தேடித் தேடி கொன்ற நர்ஸ்! இனி வாழ்நாள் முழுக்க அந்தக் கொடுமையை அனுபவிக்கணும்!

ஆனால் இரட்டை குழந்தைகள் பிறக்க, கணவன் அதிக சேனை கிழங்குகளை சாப்பிட வேண்டுமா? அல்லது மனைவி அதிக அளவில் அதை சாப்பிடவேண்டுமா என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆகவே நாங்கள் இருவருமே சிங்கப்பூரில் கிடைக்கும் Orh Nee உணவை அதிக அளவில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தோம். Orh Nee என்பதும் சேனை கிழங்கை மையமாக கொண்டு செய்யப்படும் ஒரு பிரபல சிங்கப்பூர் உணவு.

இப்படி அவர்கள் பல காலம் சாப்பிட்டு வந்தது வீணாகவில்லை என்று தான் கூறவேண்டும், காரணம் அவர்களுக்கு இப்பொது நான்கு குழந்தைகள் உள்ளனர். தர்மன் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் அந்த ஆப்பிரிக்க இன மக்களுக்கு நடந்ததை போல இவர்களுக்கு இரட்டையர்கள் பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்களுக்கு 4 குழந்தைகள் பிறக்க Orh Nee தான் காரணம் என்று கூறியும், யார் வேண்டுமானாலும் அதை சாப்பிட்டு பயனடையலாம் என்று நகைப்போடு கூறினார் தர்மன் சண்முகரத்தினம். மேலும் அதிபர் தேர்தலில் தான் தோல்வியுற்றால் அத்தோடு தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட போவதாகவும் அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த உதவும் சுரங்கப்பாதை வடிகால் திட்டம்!

click me!