கவனக்குறைவால் மாற்றி வழங்கப்பட்ட அஸ்தி! உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வருத்தம்!

By Dinesh TG  |  First Published Aug 22, 2023, 11:14 AM IST

சிங்கப்பூர் மண்டாய் தகனசாலையில் இரு குடும்பத்தினரிடம், அஸ்தியை மாற்றி வழங்கப்பட்ட சம்பவத்திற்கு, அஸ்தி சேகரிப்பு நிலையம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
 


சிங்கப்பூரில், ஏடலின் தந்தை டான் (வயது 69) கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி உயிர் இழந்தார். குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பிற்பகலில் அவரது தந்தையின் அஸ்தியை பெறுவதற்காக, சிங்கப்பூர் அரசு நிர்வகிக்கும் மண்டாய் தகனச்சாலைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு வேறு ஒருவரின் அஸ்தி வழங்கப்பட்டது. அது, ஓரிரு நாட்களுக்குப் பிறகே அவர்களிடம் தெரிவித்து மன்னிப்புக்க கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஏற்பட்ட குழப்பம் குறித்து அதிருப்தி தெரிவித்த ஏடலின் குடும்பத்தினர், தங்கள் தந்தையின் அஸ்தியை தவறான குடும்பத்திடம் வழங்கப்பட்ட சம்பவத்திற்காக, தேசிய சுற்றுப்புற வாரியம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக கூறிய தேசிய சுற்றுப்புற வாரியம், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினர்.

இச்சம்பவம் குறித்து பேசிய ஈமச்சடங்கு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், அஸ்தி வழங்கப்பட்ட நேரத்தில் இத்தகவல் அந்த குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்படவில்லை என்றார். தவறு நடந்துள்ளது உண்மை என்றும் அதனை ஒப்புக்கொள்வதாக தேசிய சுற்றுப்புற வாரிய பேச்சாளர் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் சிங்கப்பூர் Singles.. அட்டகாசமாக அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் - இனி அவங்க பாடு கொண்டாட்டம் தான்!

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்றும், அவர் மீது முறையான விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

எங்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள்.. காரணம் என்ன தெரியுமா? சீக்ரெட் சொன்ன முன்னாள் அமைச்சர் சண்முகரத்தினம்!

click me!