அடுத்து நாங்க தான்..! போருக்கு தயாராக துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுக்கும் மக்கள் - எங்கு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Mar 26, 2022, 1:32 PM IST

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா நடத்தி வரும் கடுமையான தாக்குதலை அடுத்து பலர் ஆயுதங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், எப்படி சுட வேண்டும் என்றும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.


கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் போர் தொடுக்கும் நடவடிக்கையை தொடங்கினார். இதை அடுத்து உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலமாக கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. ஒரு மாத போரில் இதுவரை பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனக்கு அடுத்து நாங்களும் தாக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு போலாந்து நாட்டு மக்கள் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளனர். போலாந்து தலைநகர் வார்சா பகுதியில் அமைந்துள்ள ஸ்டிலெனிகா வார்சாவியன்க் இடத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுப்போர் எண்ணிக்கை மும்மடங்கு வரை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

துப்பாக்கி சுடுதல் பயிற்சி:
 
மேலும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுப்போரில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம், ஆபத்து காலக்கட்டத்தில் யார் உதவியையும் எதிர்நோக்கி காத்திருக்காமல் தங்களை தற்காத்து கொள்ள இதுவரை ஆயுதம் ஏந்தாதவர்களும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு வரத் துவங்கி உள்ளனர். 

"உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா நடத்தி வரும் கடுமையான தாக்குதலை அடுத்து பலர் ஆயுதங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், எப்படி சுட வேண்டும் என்றும் பயிற்சி எடுத்து வருகின்றனர்," மார்சின் வென்சிகி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

ஆயுதங்களை கையாள்வது:

"அவர்கள் தங்களது சொந்த குடும்பத்தார் மற்றும் தங்களை பற்றி மிகவும் அச்சம் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்களை எப்படி கையாளுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். போலாந்தில் அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது," என அவர் மேலும் தெரிவித்தார். 

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடம் இருக்கும் ஆயுதங்கள் தான் போலாந்திலும் உஎள்ளது. இதனால் பொது மக்கள் பயிற்சி மேலும் எளிமையாகி விடுகிறது என்றும் வென்சிகி தெரிவித்தார். போலாந்தில் சட்டப்படி ஆயுதங்களை வைத்திருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பரிசோதனைகளை கடக்க வேண்டும்.

புது சட்டம்:

விரைவில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கான சட்டத் திட்டங்களில் மாற்றம் செய்து, எளிதில் ஆயுதங்களை வாங்குவதற்கு ஏற்ப போலாந்தில் சட்டம் இயற்றப்படலாம் என வென்சிகி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் போர் சூழலில் பொது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எளிமையாக இருக்கும்.

எதுவாயினும், ஆயுதங்களை வாங்கும் போது மனநல ஆலோசகரிடம் இருந்து மனநலம் சீராக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சான்றை சமர்பிக்க வேண்டும். நேரடியாக அடையாள முகவரி மட்டும் கொடுத்து ஆயுதங்களை வாங்கிட முடியாது. உக்ரைனில் போர் தொடங்கும் போது, பலர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தொடங்கினர். 

தற்போது போலாந்தில் ஸ்டிலெனிகா வார்சாவியன்க் பகுதியில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வருவோருக்கு கிளாக் மற்றும் AK-47 ரக துப்பாக்கிகளை எப்படி கையாள்வது என்ற பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பலர் பயிற்சி எடுக்க விரும்புவதால், துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அங்கு செல்லும் முன் பயிற்சிக்கான இடம் காலியாக உள்ளதை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியமாகி இருக்கிறது.

click me!