பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை ஆகஸ்ட் ஓன்பதாம் தேதி கலைக்க இருப்பதாகவும், இதுகுறித்து இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமர் செபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான காலக்கெடு இருக்கும்போதே கலைப்பதற்கு பிரதமர் செபாஸ் ஷெரீப் முடிவு செய்து இருக்கிறார். இதற்கான இறுதி முடிவை இன்று கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் களைத்த 90 நாட்களுக்குள் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. அதுவரை அந்த நாட்டில் காபந்து அரசு ஆட்சி செய்யும்.
பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தியில், ''ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிரதமர் மாளிகையில் நடந்த இரவு விருந்தில் ஷெரீப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டில் அரசியல் சூழலை மீட்டெடுப்பது குறித்துத் ஆலோசிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
undefined
இதுகுறித்து ஆளும் பி.எம்.எல்-என் கட்சி உள்கட்சி உறுப்பினர்களுடன் இதுகுறித்து விவாதிக்கவில்லை என்றும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான இறுதிச் சுற்று பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் துவங்க இருப்பதாகவும் செபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
Active X : இளையோர் & முதியோர் இடையே நற்பிணைப்பை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசு!
கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் எடுத்துக் கூற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துவோரை இணைத்த பிறகு, 15 மாதங்களில் வரிவருவாய் வசூல் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
மின்துறையில் 90 சதவீதத்திற்கு மேல் மீட்கப்பட்டு இருப்பதாகவும், கடந்த நான்கு மாதங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் ஐடி ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும், பாகிஸ்தானின் கடன் கடந்த 11 மாதங்களில் 18 சதவீதம் அதிகரித்து ரூ.393 பில்லியனாக உயர்ந்துள்ளது.