உலக அரங்கில் பாகிஸ்தான் ஒதுக்‍கப்பட்டுவிட்டது : ஐ.நா. பேரவையில் இந்திய பிரதிநிதி உரை

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 04:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
உலக அரங்கில் பாகிஸ்தான் ஒதுக்‍கப்பட்டுவிட்டது : ஐ.நா. பேரவையில் இந்திய பிரதிநிதி உரை

சுருக்கம்

பாகிஸ்தான் அன்றாடம் கூறிவரும் பொய்களை உலக நாடுகள் நம்பியகாலம் மலையேறிவிட்டது என்றும், இன்று தீவிரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்‍கு எந்த நாடும் ஆதரவு அளிக்‍கவில்லை என்றும் ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.வுக்‍கான இந்திய நிரந்தர பிரதிநிதி திரு.சையத் அக்‍பருதீன், ஐ.நா. பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தானுக்‍கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் தொடர்பாக அந்நாட்டின் தூதர் எம்.லோதி பேரவையில் தெரிவித்த கருத்துகளை கடுமையாக ஆட்சேபித்த திரு. அக்‍பருதீன், பாகிஸ்தானின் குரலை வேறு எந்த நாடும் எதிரொலிக்‍க வில்லை என்று சுட்டிக்‍காட்டினார்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருகிணைந்த பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்திய திரு.அக்‍பருதீன், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டார். பாகிஸ்தான் உலக அரங்கில் எவ்வளவு முயன்றாலும், இந்த உண்மை நிலவரத்தை மாற்றிவிட முடியாது என்றும் திரு.அக்‍பருதீன் உறுதிபட தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!