5ஜி தொலைத்தொடர்பு சேவை சோதனை முயற்சியைத் தொடங்கியது சீனா!

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 01:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
5ஜி தொலைத்தொடர்பு சேவை சோதனை முயற்சியைத் தொடங்கியது சீனா!

சுருக்கம்

சீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்கான சோதனை முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத்துறை 4ஜி எனப்படும் அதிவிரைவு சேவையையே தற்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையை களம் இறக்க சீனா சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

தற்போது இளைய சமூகத்தினர் தகவலை பெற ஸ்மார்ட் போனையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி சேவையே தற்போது நடைமுறையில் உள்ளது. சீனாவில் மட்டும் 100 கோடிக்‍கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் செயலாற்றும் இந்த 4ஜி இணைப்பைவிட, வினாடிக்கு 20 ஜிகாபைட்ஸ் வரை படுவேகமாக இயங்கக்கூடிய 5ஜி இணைப்பை தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது.

4ஜி சேவை மூலம் தகவலை பெற சுமார் 10 மில்லிவினாடி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் 5ஜி இணைப்பில் ஒரே மில்லிவினாடியில் மிக துரிதமாக தகவல்களை பெறலாம். சீனாவில் உள்ள 100 முக்கிய பெருநகரங்களில் இந்த 5ஜி சேவையை தொடங்குவதற்கான சிக்னல் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற கட்டுப்பாட்டு மையங்களை அமைதுள்ளனர். சோதனை ரீதியான முதல்கட்ட முயற்சியில் சீனா தற்போது களமிறங்கி உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!