Pakistan Election 2024 : பாகிஸ்தானில் உள்ள தொகுதிகளுக்கு நேற்று பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்பொது தேர்தல் முடிவுகள் மெல்ல மெல்ல வெளியாகி வருகின்றது.
இந்த பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடைய தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தான் தொடக்கம் முதலிலிருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்து வந்தது. ஆனால் தற்பொழுது ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி இம்ரான் கான் சிறையில் உள்ள நிலையில் அவருடைய கட்சி முடக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்ச்சையாக நின்று போட்டியிட்டுள்ளனர். இது தவிர பாகிஸ்தான் தேர்தல் களத்தில் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி, பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவையும் நேருக்கு நேர் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த தேர்தல் களத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது இம்ரான் கானின் கட்சி தான்.
கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 400 பேரை கொன்ற பாதிரியார்: உலகை உலுக்கிய பயங்கரம்!
மொத்தம் 336 இடங்களைக் கொண்டதுதான் பாகிஸ்தான் நாடாளுமன்றம், ஆனால் இதில் நேற்று 266 இடங்களுக்கு தான் தேர்தல் நடைபெற்றது. காரணம் மீதியுள்ள 70 இடங்கள் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும். ஆகையால் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியை தான் வெற்றி பெற்ற கட்சியாக அறிவிப்பார்கள்.
இந்நிலையில் இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவருடைய கட்சி முடக்கப்பட்டு இருக்கிறது இருப்பினும் அக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு மொத்தம் 49 இடத்தை வென்றிருக்கின்றனர். அதேபோல நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 38 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 31 இடங்களையும் பெற்றிருக்கிறது. இது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கிடைத்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் கட்சி, வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முடிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நவாஸ் கட்சியினர் வெளியிட்ட தகவலில், தங்கள் தலைவர் வெற்றி உரையை தயார் செய்து வருவதாக கூறி வருவதாகவும் இப்பொது தகவல்கள் கிடைத்துள்ளது.
லட்சங்களில் விற்கப்படும் ஆடம்பர ஹேண்ட்பேக்களை வாங்கி கிழிக்கும் யூ டியூபர்.. ஏன் தெரியுமா?