கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 400 பேரை பாதிரியார் ஒருவர் கொலை செய்த விவகாரம் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில், மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ’குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் பாதிரியாராக பால் மெக்கன்சி நெதாங்கே என்பவர் உள்ளார். இவர் தனது பிரசங்கத்தின் போது, உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்து பிரார்த்தனை செய்பவர்கள்தான் இயேசுவை சந்திக்க முடியும், சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என போதனை செய்துள்ளார்.
இதனை நம்பி பலரும் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, தேவாலயம் அமைந்துள்ள சுமார் 800 ஏக்கர் வனப்பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அதில், 191 குழந்தைகள் உட்பட 400 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிரியார் மற்றும் அவரின் சீடர்கள் 29 பேர் என மொத்தம் 30 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதனிடையே, கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில் அவர்களில் பலரும் பட்டினி, மூச்சுத்திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரியவந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த 30 பேரும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக மலிண்டி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. பாதிரியார் மற்றும் அவருடைய சீடர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீதிமன்றக் காவலில் இருக்கும் பாதிரியார், பால் மெக்கென்சி விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பால் மெக்கன்சியுடன் அவரது சீடர்கள் 29 பேரும் வருகிற மார்ச் மாதம் 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் செய்கிற வேலையா இது.. பள்ளி சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை..!