பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல்! பயங்கரவாத அச்சுறுத்தலால் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

By SG Balan  |  First Published Feb 8, 2024, 8:47 AM IST

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, இம்ரான் கானுக்கு ராணுவம் துணைபோவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தார். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகியுள்ளது. இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் நிலையற்ற அரசியல் சூழல் ஆகியவற்றால் திண்டாடிவரும் பாகிஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் யாருக்கும் தெளிவான வெற்றி கிடைக்காது என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சிக்கும் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பி.எம்.எல்.) கட்சிக்கும் இடையே காடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இம்ரான் கான் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னணியில் இருப்பதாதக் கருதப்படுகிறது. இவர்கள் தவிர முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் 35 வயது மகனான பிலாவல் பூட்டோ சர்தாரி மூன்றாவது அணியாக இந்தத் தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 76 ஆண்டுகளில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் ராணுவம் நேடிடியாக அரசியலில் தலையிடவில்லை.

இருப்பினும், "பலம் வாய்ந்த ராணுவமும் அதன் பாதுகாப்பு அமைப்புகளும் எந்தப் பக்கம் இருக்கின்றன என்பதுதான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி" என்று கட்டுரையாளர் அப்பாஸ் நசீர் கூறுகிறார்.

ப்ளீஸ் காப்பாத்துங்க... அமெரிக்காவில் முகத்தில் வழியும் ரத்தத்துடன் உதவி கேட்கும் இந்திய மாணவர்!

தனது கட்சியை அழித்தொழிக்கும் முயற்சியின் பின்னணியில் ராணுவம் இருப்பதாக இம்ரான் கான் நம்புகிறார். அதே நேரத்தில் அவரது எதிர்ப்பாளர்கள் நவாஸ் ஷெரீப்பை ஆதரிக்கிறார்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, இம்ரான் கானுக்கு ராணுவம் துணைபோவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தார். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகியுள்ளது. இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

"வரலாற்று ரீதியாக பாகிஸ்தான் தேர்தல்கள் ஸ்திரமான அரசுகளை உருவாக்கவில்லை" என்று கூறும் நசீர், "பொருளாதார சவால்கள்தான் மிகவும் தீவிரமானவை. மிகப்பெரியவை. அதற்கான தீர்வுகள் மிகவும் வேதனை அளிக்கக்கூடியவையாகவும் இருக்கும். ஆட்சிக்கு வரும் பொருளாதாரத்தை எவ்வாறு நிலைநிறுத்துவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் கூறுகிறார்.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பின்படி, பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் யாருக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது.

ஒயிட் பேப்பர் என்றால் என்ன? மத்திய அரசு வெள்ளை அறிக்கையின் வரலாறும் பின்னணியும்

பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும். அடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமற்ற முதல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதிகாரபூர்வமான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளிவரும்.

336 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 169 இடங்கள் தேவைப்படும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற சூழலில் ஆட்சி அமைப்பதில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்க முடியும். வாக்காளர்கள் நேரடியாக 266 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், 70 இடஒதுக்கீடு இடங்களும் உள்ளன. அதில் பெண்களுக்கு 60 மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 10 இடங்கள் கிடைக்கும்.

சுயேட்சைகள் பலர் இம்ரான் கானின் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றால் எந்தக் கட்சியிலும் சேரலாம். ஆனால், தனது வேட்பாளர்கள் ஷெரீப்பையோ அல்லது பூட்டோ சர்தாரியையோ ஆதரிக்க மாட்டார்கள் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையிலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முன்னதாக, தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்களில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளை தற்காலிகமாக மூடுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

காணாமல் போய் 22 வருஷம் ஆகிருச்சு... சாமியாராக மாறி தாயிடம் பிச்சை கேட்டு வந்த மகன்!

click me!