"நான் வீட்டிற்குத் திரும்பும் போது நான்கு பேர் என்னைத் தாக்கினர். என் வீட்டின் அருகே அவர்கள் என்னை அடித்து உதைத்தனர், தயவு செய்து எனக்கு உதவுங்கள், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று சையத் தனது வீடியோவில் கூறுகிறார்.
சிகாகோவில் உள்ள ஒரு இந்திய மாணவர், கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பின்னர் அவருக்கு முகத்தில் ரத்தம் வழிய உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கவலையடைந்த அவரது குடும்பத்தினர், ஐதராபாத்தில் உள்ள இளைஞரின் மனைவி அமெரிக்காவில் சென்று அவரைச் சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி தனது மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிய உதவி கோரி கெஞ்சுகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவரது மனைவி சையதா ருகுலியா பாத்திமா ரிஸ்வி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள எனது கணவரின் பாதுகாப்பைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெற அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் நான் எனது மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று என் கணவருடன் இருக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவும் வேண்டுகிறேன்" என பாத்திமா ரிஸ்வி கோரிக்கை வைத்துள்ளார்.
சையத் மசாஹிர் அலி இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு மாணவர். சிகாகோவில் அவர் தங்கியிருக்கும் வீட்டின் அருகே அவரைத் தாக்கிய மூவர் அவரைப் பின்தொடரும் காட்சி அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
"நான் வீட்டிற்குத் திரும்பும் போது நான்கு பேர் என்னைத் தாக்கினர். என் வீட்டின் அருகே அவர்கள் என்னை அடித்து உதைத்தனர், தயவு செய்து எனக்கு உதவுங்கள், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று சையத் தனது வீடியோவில் கூறுகிறார்.
இந்த ஆண்டு அமெரிக்காவில் நான்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் மர்மான முறையில் இறந்து கிடந்தத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க பாஸ்போர்ட்டை வைத்திருந்த 19 வயது மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் கடந்த வாரம் இறந்து மர்ம்மான முறையில் இறந்தார். மற்றொரு மாணவர், நீல் ஆச்சார்யா, கடந்த வாரத் தொடக்கத்தில், பர்டூ பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்தார். அவரது தாயார் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர், ஜார்ஜியாவின் லித்தோனியாவில் வீடற்ற ஒருவரால் ஜனவரி 16 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான், ஜனவரி மாதம் இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இறந்து கிடந்தார்.