இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது தாக்குதல்; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

By SG Balan  |  First Published Feb 7, 2024, 8:05 AM IST

ஹவுதிகள் தற்காப்புக்காக அனைத்து அமெரிக்க, பிரிட்டிஷ் இலக்குகளுக்கு எதிராக அதிக தாக்குதல்களை மேற்கொள்ளப்படும் என்று ஹவுதி செய்தித்தொடர்பாளர் யாஹ்யா ஸாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாயன்று செங்கடலில் நடத்திய இரண்டு தாக்குதல்களில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். இதுபோல ஹவுதிகள் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் செங்கடலில் உலகளாவிய கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரான் நாட்டு அரசின் ஆதரவுடன் இயங்கிவருகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர்கள் செங்கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

Tap to resize

Latest Videos

அவர்களின் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஹவுதி இலக்குகளைக் குறிவைத்து சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்கள் நடத்தின. இந்நிலையில், ஹவுதியின் செய்தித்தொடர்பாளர் யாஹ்யா ஸாரி, செவ்வாயன்று அமெரிக்கக்  கப்பலான ஸ்டார் நாசியா மீதும் பிரிட்டிஷ் கப்பலான மார்னிங் டைடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்துள்ளார்.

விண்வெளியில் ஒரு அற்புதம்! பூமியும் சந்திரனும் அருகருகே இருக்கும் அரிய புகைப்படம்!

தாக்கப்பட்ட இரண்டு கப்பல்களும் இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்தவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹவுதிகள் தற்காப்புக்காக அனைத்து அமெரிக்க, பிரிட்டிஷ் இலக்குகளுக்கு எதிராக அதிக தாக்குதல்களை மேற்கொள்ளப்படும் என்றும் ஸாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே, ஏமனுக்கு அப்பால் பிரிட்டனுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனால் பின்னர் பார்படாஸ் கொடியுடன் வந்த கப்பல் தாக்கப்பட்டதாகக் கூறியது. இது கப்பலின் அருகே காணப்பட்ட ஒரு சிறிய படகில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அம்ப்ரே கூறியுள்ளது. அதனால், கப்பல் பாதிக்கப்படவில்லை என்றும் கப்பலுக்கு அருகில் வெடித்ததால் சிறிய சேதம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பெரும்பாலான வர்த்தகம் பொதுவாக செங்கடல் மற்றும் மத்தியதரைக் கடலுக்கு செல்லும் சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது. உலகளாவிய கடல் வர்த்தகத்தில் 12 சதவீதத்தைக் கொண்டுள்ள செங்கடல் வழியான வழித்தடத்தில், ஹவுதி தாக்குதல்கள் காரணமாக சில கப்பல் நிறுவனங்கள் செங்கடலைத் தவிர்த்து தென்னாப்பிரிக்காவைச் சுற்றிச் செல்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் போர்ட்வாட்ச் (PortWatch) தளத்தின்படி, சூயஸ் கால்வாய் வழியாக மொத்த போக்குவரத்து அளவு இந்த ஆண்டு ஜனவரி 16 க்குள் 37 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

200% அதிகரித்த டீப்ஃபேக் படங்கள்! நம்பகத் தன்மையை இழந்துவரும் பயோமெட்ரிக் முறை!

click me!