மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பாகிஸ்தானில் 6.50 லட்சம் கர்ப்பணிப் பெண்களுக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பும், உணவும் தேவை என்று ஐ.நா.வின் பாப்புலேஷன் பண்ட்(யுஎன்எப்பிஏ) தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பாகிஸ்தானில் 6.50 லட்சம் கர்ப்பணிப் பெண்களுக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பும், உணவும் தேவை என்று ஐ.நா.வின் பாப்புலேஷன் பண்ட்(யுஎன்எப்பிஏ) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியில் தொடங்கிய பருவமழை அந்நாட்டில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மழை மற்றும் வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
அருணாச்சலப்பிரதேச எல்லையை சீன உரிமை கொண்டாடுவது அட்டூழியம்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அதிர்ச்சி
இந்நிலையில் பாகிஸ்தான் நிலையைப் பார்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பாப்புலேஷன் பண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்துவரும் மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் நாசமாகிவிட்டது. லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளததால் சேதமடைந்துள்ளன. மக்கள் தங்குவதற்கும், பெண்கள் தங்கவும் பாதுகாப்பான இடமில்லை. இதே நிலை நீடித்தால் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும்.
இதுவரையில்லாத வெள்ளத்தில் பாகிஸ்தானில் 6.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73 ஆயிரம் பெண்களுக்கு அடுத்த மாதத்தில் பிரசவம் ஆகும்நிலையில் உள்ளனர். உடனடியாக இந்தப் பெண்களுக்கு மருத்துவக் கவனிப்பும், சத்தான உணவும் அவசியம் தேவை.
இந்த 73ஆயிரம் கர்ப்பணிப் பெண்களுக்கு பிரசவம் பார்க்க தேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பச்சிளங்குழந்தைகளைக் கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், மாத்திரைகள், உள்ளிட்ட பொருட்கள் உடனடியாகத் தேவை.
அவசரகாலம் முடியட்டும், இயற்கைப் பேரிடர் குறையட்டும் என்று கர்ப்பம் தரித்தலும், குழந்தைப் பேறும்காத்திருக்காது. பெண்களும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தையும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் சிறந்த கவனிப்பு அவசியமானதாகும்” எனத் தெரிவித்துள்ளது.
யுஎன்எப்பிஏ அமைப்பின் பாகிஸ்தான் பிரதிநிதி பக்தியார் கடிரோவ் கூறுகையில் “ சவாலான நேரத்திலும் கூட கர்ப்பணிப் பெண்களுக்கும், குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தொடர்ந்து சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிந்து மாகாணத்தில் 1000க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் சேதமடைந்துள்ளன. பலுசிஸ்தானில் 198 மையங்கள் சேதமடைந்துள்ளன. 1600 பேர் காயமைடந்துள்ளனர், 7.35 லட்சம் கால்நடைகள் காயமடைந்துள்ளன.
இந்தப் பகுதி மக்களுக்கு கால்நடை வளர்ப்புதான் பெரிய வாழ்வாதாரமாக இருந்தது. இந்த மழையால் அது கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், ஏறக்குறைய 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சாலைகள் மோசமாக சேதமடைந்திருப்பதால், மழையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சவாலாக இருந்தாலும் இந்த பகுதி மக்களுக்கு தொடர்ந்து மருத்துவவசதியும், மனிதநேய உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்தார்