இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், சீனாவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி, வெப்பம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. இது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரீன்லாந்து உலகளாவிய கடல் மட்டத்தை குறைந்தபட்சம் 27 சென்டிமீட்டர் அல்லது 10.6 அங்குலங்கள் உயர்த்த இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய கணிப்புகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக தற்போதைய பனி மலைகள் உருகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றை ஜோம்பி ஐஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, செயலற்று இருந்த இந்த பனி மலைகள், தடிமனான பனி மலைகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன. தற்போது இந்த பனி மலைகளுடன் இணைத்துக் கொள்ள புதிய பனி மலைகள் எதுவும் உருவாகவில்லை. எனவே, இந்த பனி மலைகள் தற்போது உருகி வருகின்றன. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று கூறப்படுகிறது.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், '' இன்று உலகம் முழுவதும் புதை படிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும், கிரீன்லாந்து பனிக்கட்டி இன்னும் 110 குவாட்ரில்லியன் டன் பனியை இழக்கும். இது சராசரியாக உலகளாவிய கடல் மட்டம் குறைந்தது 27 சென்டிமீட்டர் அளவிற்கு உயருவதற்கு வழிவகுக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.
"இந்த நூற்றாண்டிற்குள் இந்த சதவீதமும் இரட்டிப்பு ஆக வாய்ப்பு இருக்கிறது. புவி வெப்பமடைதல் தொடரும் என்று எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலையில், கடல் மட்ட உயர்வுக்கு கிரீன்லாந்து பனி மலைகளின் பங்களிப்பு மட்டுமே காரணமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை பேராசிரியர் ஜேசன் பாக்ஸ் தலைமையில் நடந்துள்ளது. கடல் மட்டம் 30 சென்டிமீட்டர் வரை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன்லாந்தில் உள்ள மலைகளில் பனிப்பொழிவு கீழ் நோக்கி பாய்கிறது மற்றும் பனிப்பாறைகளின் பக்கங்களை தடிமனாக்குகிறது. விளிம்புகளில் உருகுவது சமநிலை அடைகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து பனி மலை உருவாவதற்கு பதிலாக, உருகுதல் அதிகரித்து ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் என்னதான் மாசுபாட்டைக் குறைக்க, மாசுக்காற்றை குறைக்க நடவடிக்கை எடுத்தாலும், கிரீன்லாந்தின் மொத்த பனி அளவுகளில் 3.3% உருகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!