பாகிஸ்தானில் 8 வயது சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மற்றொரு குற்றச் சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் உமர்கோட் பகுதியில் இந்து மதத்தை சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
undefined
மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?
பாகிஸ்தானில் உள்ள இந்து உரிமை ஆர்வலர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்துச் செல்லும் போது, ஸ்ட்ரெச்சரில் இருந்த போது வீடியோ கிளிப் ஒன்று எடுக்கப்பட்டு, ட்விட்டரில் பகிரப்பட்டது. இதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அருகில் இருந்த பெண் கூறும்போது, ‘சிறுமியின் பிறப்புறுப்புகளில் இருந்து தொடர்ந்து இரத்தப்போக்கு உள்ளது. சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் சிறுமியின் முகத்தை முழுவதும் சிதைக்க முயற்சித்து உள்ளனர். பாகிஸ்தானில் ஏழைகளுக்கு இடமில்லை. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
8-year-old Hindu girl Kavita is stabbed in both eyes during gang rape in Umarkot, Sindh-Pakistan. She is in hospital, still bleeding and in critical condition. pic.twitter.com/NSA2S0IHum
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?
இதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும் இந்து உரிமை ஆர்வலர் வெளியிட்ட மற்றொரு காணொளியில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒரு செய்தி ஊடகத்திடம், சிறுமி உள்ளூரில் உள்ள கடைக்கு சென்றதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை’ என்று கூறியிருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.
காணாமல் போன சிறுமி சில மணி நேரங்களுக்குப் பிறகு, உமர்கோட் காவல்துறையினரால் மீட்கப்பட்டார். போலீசார் அவரை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !