flood in paksitan: பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்: ஆயிரம் பேர் உயிரிழப்பு: சர்வதேச உதவி கோருகிறது

By Pothy Raj  |  First Published Aug 29, 2022, 11:17 AM IST

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்துவரும் மழையால் அந்த நாட்டில் உள்ள ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,033 பேர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தனர்.


பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்துவரும் மழையால் அந்த நாட்டில் உள்ள ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,033 பேர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 119 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சமாளிக்க முடியாத வகையில் வெள்ளம் இருப்பதால், சர்வதேச உதவியை பாகிஸ்தான் கோரியுள்ளது.

Latest Videos

undefined

பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்… ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்த நாசா!!

பாகிஸ்தானில் பேரழிவான காலநிலைதான் இந்த பேய்மழைக்கும், பெருவெள்ளத்துக்கும் காரணம் என்று அந்நாட்டு காலநிலைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியிலிருந்து மழை வெளுத்து வாங்கிவருகிறது. இதுவரை அந்நாட்டில் 388 மி.மீட்டர் மழைபதிவாகியுள்ளது இது வழக்கமான சரிசரியைவிட 200 மடங்கு அதிகமாகும்.

மழை வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த 4.50 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மழை, வெள்ளத்தால் இதுவரை 3.30 கோடி பேர் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வயல்கள், விவசாய நிலங்கள் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள்... விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!

இந்த மழையால் பெரும்பாலும் கைபர்பக்துன்கவா மற்றும் சிந்து மாகாணத்தின் தெற்குப்பகுதிகள்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

பாகிஸ்தான் எம்.பி.யும் காலநிலை அதிகாரியுமான ஷெரி ரஹ்மான் கூறுகையில் “பாகிஸ்தான் மிக மோசமான காலநிலை பேரழிவில் இருக்கிறது.கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான ஆண்டு. அதிகமான வெப்பம், காட்டுத்தீ, பெருவெள்ளம், பனிமலை உருகுதல், பனிமலை சரிவு, பருவம் தவறிய மழை என்று காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளைப் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது” எனத் தெரிவித்தார்

கைபர்பக்துன்கவாவின் வடமேற்கில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஆபத்தான கட்டத்தைக் கடந்து வெள்ளநீர் பாய்கிறது.இதனால் நவ்ஷேரா மாவட்டத்தின் சார்சதா உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால், 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் சாலை ஓரங்களிலும், மரத்தின் அடியிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடு: வைரல் வீடியோ!!

கைபர்பக்துன்கவா மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் கம்ரான் பங்காஷ் கூறுகையில் “பெரு வெள்ளத்தால் இதுவரை 1.80 லட்சம் பேர் சார்சதாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர், நவ்ஷேரா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து 1.50லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தால் அந்நாட்டில் உள்ள 4 மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான சாலைகள் பெயர்ந்து, இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் லட்சக்கண்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்

 

இலங்கையில் பட்டியினியில் வாடும் குழந்தைகள்; தெற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐநா!!

பாகிஸ்தானில் உள்ள பேரிடர் மீட்புப்படையினரால் மீட்புப்பணிகளை துரிதமாகச் செய்ய இயலாத அளவுக்கு சூழல் இருக்கிறது. இதையடுத்து, சர்வதேச உதவியை பாகிஸ்தான் கோரியுள்ளது. 

click me!