இலங்கையில் குழந்தைகள் உணவு கிடைக்காமல் இரவு படுக்கைக்கு செல்கின்றனர். இதுபோன்ற நிலைமை தெற்காசிய நாடுகளுக்கும் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இலங்கையில் குழந்தைகள் உணவு கிடைக்காமல் இரவு படுக்கைக்கு செல்கின்றனர். இதுபோன்ற நிலைமை தெற்காசிய நாடுகளுக்கும் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
வரலாற்றில் காணாத பொருளாதார வீழ்ச்சியில் இலங்கை சிக்கி, பஞ்சம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரத்தில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டது. இலங்கை பொதுவாக பெரும்பாலான பொருட்களை இறக்குமதிதான் செய்கிறது. முக்கியமாக மருந்துகள், பால் பொருட்கள், பேப்பர், எரிபொருட்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. கொரோனாவுக்குப் பின்னர் தொடர்ந்து இவற்றை இறக்குமதி செய்து வந்த நிலையில், அந்நிய செலாவணி இருப்பும் கரையத் துவங்கியது.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. உள்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டியது. உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க முடியாமல், பட்டினிக்கு நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சீனாவுடன் மீண்டும் போரா? எல்லைப் பகுதியில் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய ராணுவம்!!
இதுகுறித்து தெற்காசிய குழந்தைகளுக்கான ஐநா பிரிவின் இயக்குநர் ஜார்ஜ் லார்யே அட்ஜெய் அளித்த பேட்டியில், ''உணவுப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க முடியாத காரணத்தினால், இலங்கை குழந்தைகள் உணவை தவிர்த்து வருகின்றனர். பட்டினியாக படுக்கைக்கு செல்கின்றனர். அடுத்த உணவு எப்போது கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலை குழந்தைகளுக்கு உருவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.
இலங்கை அரசு 51 பில்லியன் டாலர் அளவிற்கு கடன்பட்டது. இந்தக் கடனை மட்டுமில்லை, வட்டியையும் இலங்கையால் திரும்பச் செலுத்த முடியவில்லை. தற்போது நாட்டை கடனில் இருந்து மீட்பது குறித்து சர்தேச நிதி ஆணையத்திடம் நிதி பெறுவது குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதும் தெற்கு ஆசியப் பகுதிகளில் விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைகிறது. சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கையில் நிலவும் சூழல், தெற்காசிய நாடுகளிலும் விரைவில் ஏற்படலாம் என்று ஐநா இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இலங்கை குழந்தைகளுக்கான அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக யுனிசெப் 25 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. இது இலங்கையின் பாதி குழந்தைகளின் உணவு பஞ்சத்தை தீர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆய்வின்படி, இலங்கையில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மொத்தமுள்ள 5.70 லட்சம் குழந்தைகளில், 1.27 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருந்துள்ளன.
வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!