வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!

Published : Aug 26, 2022, 09:55 PM IST
வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!

சுருக்கம்

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டும், உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு முடிவுகளை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டது.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள்... விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!

அதன்படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகளாவிய செல்வாக்கு ஒப்புதல் மதிப்பீட்டில், மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல் 63 சதவீத மக்கள் ஆதவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீதம் மக்கள் ஆதரவுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 42 சதவீத மக்கள் ஆதரவுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: இறுதி சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீத மக்கள் ஆதரவை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஜோ பைடனை தொடர்ந்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீதம் மக்கள் ஆதரவுடன் ஆறாவது இடத்திலும், ஜப்பான் பிரதமர்புமியோ கிஷிடா 38 சதவீதம் மக்கள் ஆதரவுடன் ஏழாவது இடத்தில் உள்ளதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு