பூமியை நோக்கி பெரிய விமானத்தின் அளவிலான விண்கல் ஒன்று வந்துக்கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
பூமியை நோக்கி பெரிய விமானத்தின் அளவிலான விண்கல் ஒன்று வந்துக்கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சமீப காலமாக பூமியைச் சுற்றி விண்கற்களின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. விண்கற்கள் என்பது சூரியனைச் சுற்றி வரும் மிகப்பெரிய விண்வெளிப் பாறைகள் ஆகும். இது கோள்களின் ஈர்ப்பு விசையின் காரணமாக, சில சமயங்களில் கோள்களின் மீது மோதிவிடும். இந்த நிலையில் பூமியை நோக்கி பெரிய விமானத்தின் அளவிலான விண்கல் ஒன்று வந்துக்கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. மேலும் இது ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று பூமியை மிக அருகில் நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கையில் பட்டியினியில் வாடும் குழந்தைகள்; தெற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐநா!!
NEO 2022 QP3 என அழைக்கப்படும் இந்த விண்கல்லானது இந்திய நேரப்படி இரவு 9.55 மணியளவில் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசாவின் CNEOS தெரிவித்துள்ளது. இது 100 அடி அகலம் கொண்ட ஒரு பெரிய விண்கல் ஆகும். இந்த விண்கல் பூமிக்கு 5.51 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் பூமியை நெருங்கும் அந்த விண்கல்லின் அளவு மற்றும் தொலைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விண்கல்லிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து, அதை சாத்தியமான அபாயகரமான பொருளாக அறிவித்தது.
இதையும் படிங்க: சீனாவுடன் மீண்டும் போரா? எல்லைப் பகுதியில் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய ராணுவம்!!
பூமியை இந்த விண்கல் 7.23 கி.மீ வேகத்தில் நெருங்கி வருவதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 100 அடிக்கு மேல் உள்ள விண்கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எவ்வித குறிப்பிடத்தக்க பாதிப்பையும் இந்த விண்கற்கள் ஏற்படுத்தப் போவதில்லை என்று நாசா தெரிவித்துள்ளதால் சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது. 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் 110 அடி அகலமுள்ள NEO 2022 QP3 என்ற விண்கல், 5.51 மில்லியன் கிலோ மீட்டர் தொலைபில் இன்று பூமியைக் கடக்கும், நாளை 2022 QX4 மற்றும் 2017 BU ஆகிய 2 விண்கற்களும் பூமியை கடந்து செல்ல உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.