11 நிமிடங்கள் மட்டுமே உடலுறவு.. 17 வயது சிறுவனுக்கு தண்டனை குறைத்த பெண் நீதிபதி..

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2021, 5:58 PM IST
Highlights

இதனையடுத்து அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் நீதிபதி இதில் அதிர்ச்சி தீர்ப்பு ஒன்று கொடுத்துள்ளார் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த 33 வயது நபருக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த 17 வயது சிறுவனுக்கு வெறும் 36 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்கியுள்ளார். 

சுவிட்சர்லாந்தில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்த சிறுவன்  11 நிமிடங்கள் மட்டுமே பாலியல் பலாத்காரம் செய்ததால், அந்தப் பெண்ணுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என காரணம் கூறி, அந்த குற்றவாளிக்கு 51 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக தண்டனை குறைத்து கொடுக்கப்பட்டுள்ள சம்பவம், அந்நாட்டின் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே அந்த தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என அந்நாட்டின் பெண் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதை தடுக்க எத்தனையோ நடவடிக்கை எடுத்தும், குற்றங்கள் குறைந்தபாடில்லை, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டித்தால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும் என ஒரு சாரார் கோரிக்கை வைத்து வருகின்றனர், இந்நிலையில் கற்பழிப்பு குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் தண்டனை காலத்தை குறைத்து நீதிமன்றம் சலுகை வழங்கியிருப்பது. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2020 ஸ்விட்சர்லாந்து நாட்டின் பாசலில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவரை இருவர் கூட்டு பலாத்காரம் செய்தனர், அதில் ஒருவருக்கு 17 வயது மற்றொருவருக்கு 33 வயது, இதுதொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், போர்த்துக்கீசியர்கள் இருவர் தன வீட்டிற்குள் நுழைந்து தன்னை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார். 

இதனையடுத்து அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் நீதிபதி இதில் அதிர்ச்சி தீர்ப்பு ஒன்று கொடுத்துள்ளார் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த 33 வயது நபருக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த 17 வயது சிறுவனுக்கு வெறும் 36 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்கியுள்ளார். அதற்கு அவர் தெரிவித்த காரணம்தான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது 17 வயது சிறுவன் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதால், அந்த பெண்ணுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை, அதனால் தண்டனையை குறைத்து வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து அந்நாட்டின் பெண்ணுரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நீதிமன்றத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதுடன் தீர்ப்பை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஒரு பாலியல் குற்றவாளி வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே கற்பழிப்பு செய்துள்ளார் என்பதற்காக தண்டனையை குறைத்து வழங்கியிருப்பது மிகவும் வெட்கக்கேடானது. பாலியல் குற்றவாளியின் குற்றத்திற்கு காலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்குவது அவமானகரமானது, இந்தத் தீர்ப்பின் மூலம் ஸ்விட்சர்லாந்தில் பலாத்கார வழக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் முழங்கியுள்ளனர். இதில் அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டு நீதிபதிக்கு எதிராக முழக்கம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 
 

click me!