Singapore : உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று தான் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், அதுமட்டுமல்லாமல் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை பல வருடங்களாக தக்கவைத்துக்கொண்டுள்ள ஒரு விமானநிலையமைது.
இந்நிலையில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகளை விமானங்களுக்கு ஏற்ற, அந்த இணைப்பு பலத்தை மனித சக்தி கொண்டு இணைக்க வேண்டும். பிறகு விமானத்தில் இருந்து பாலம் சரியாக 50 செ.மீ தூரம் இருக்கும்போது, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் அதில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இது தான் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்று.
மேலும் பெரிய ரக விமானங்களில் பயணிகளை ஏற்றும் பொழுது இரு கதவுகளின் வழியே பயணிகளை ஏற்ற இருவெவ்வேறு பணியாளர்கள் இந்த இணைப்பு பாலத்தை நகர்த்தி விமானத்தோடு இணைத்து பயணிகளை உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். பொதுவாக இந்த பாலத்தை இணைக்க இரண்டு நிமிட நேரமே ஆகும் என்றாலும் அது அதை இயக்கும் நபரை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், முதல்முறையாக முழுமையாக ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கும் இணைப்பு பாலம் தற்பொழுது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட குறைவான நேரத்தில் விமானத்துடன் இணைப்பு பாலத்தை இணைத்து பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறது.
பாலம் விமானத்தோடு மோதுவதை தவிர்ப்பதற்காக குறைந்தபட்சம் இரண்டு சென்டிமீட்டர் இடைவெளியை இந்த தானியங்கி இணைப்பு பாலம் தக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியாளர்கள் இதை "இன்டெலிஜென்ட் டாக் இன் சிஸ்டம்" என்று அழைக்கிறார்கள். லேசர் கருவிகளைக் கொண்டு விமானத்தின் கதவுகளை சரியாக கிரகித்து இந்த தானியங்கி இணைப்பு பாலம் செயல்படுகிறது.
பணியாளர்கள் மூலம் மேனுவலாக இயக்கப்படும் முறையை தவிர்க்க தற்பொழுது இந்த புதிய டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இரண்டு கதவுகளை கொண்ட பெரிய விமானங்களில் பயணிகளை ஏற்ற வசதியாக புதிய ரிமோட் கண்ட்ரோல் பேனல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புதிய அறிமுகத்தால் விமான நிலைய அதிகாரிகள் தங்களுக்கு உண்டான பிற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த இது வழிவகுக்கிறது என்றும் சாங்கி விமானநிலையம் தெரிவித்துள்ளது.
கிரீஸ் நாடு சென்றடைந்தார் பிரதமர் மோடி; இந்தியா வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு!!