சிங்கப்பூரில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான மனுதாக்கல் முடிந்துள்ள நிலையில், மூன்று பேர் புதிய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.
ஆனால் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு சில விஷயங்களை இந்த பதிவில் விளக்கமாக காணலாம். முதலில் தேர்தலில் பங்கேற்க ஜனாதிபதி வேட்பாளர்கள் சரியாக S$40,500 சிங்கப்பூர் டாலர் செலுத்தவேண்டும். இந்திய மதிப்பில் அது சுமார் 24 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கேக்கவே தலை சுத்துது, நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது தான் நிஜம்.
மேலும் செலுத்திய இந்த தேர்தல் டெபாசிட்டை திரும்பப் பெற, ஒரு வேட்பாளர் சிங்கப்பூர் தேர்தலில் பதிவான வாக்குகளில் எட்டில் ஒரு பங்கிற்கு மேல் பெற வேண்டும் என்பது தான் உச்சகட்ட சுவாரசியம். சிங்கப்பூரின் தேர்தல்கள் ஆணையம் (ELD - Election Department) கூற்றுப்படி, ஒரு ஜனாதிபதி வேட்பாளர் 12.5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால், அவரது தேர்தல் வைப்புத்தொகையை இழக்க நேரிடும் (டெபாசிட் காலி).
Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி
அதே நேரத்தில் பதிவான வாக்குகளில் 12.5 சதவீதத்துக்கு மேல் பெறாவிட்டாலும், சில நேரங்களில் தேர்தல் டெபாசிட் திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதற்கு கீழ்கண்ட விஷயங்கள் நடக்கவேண்டும்.
வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார், என்றால் அவருடைய டெபாசிட் திரும்ப கிடைக்கும்.
வேட்பாளர் தேர்தலுக்கு முன்பு தனது வேட்புமனுவை திரும்பப் பெறுகிறார், என்றாலும் டெபாசிட் திரும்ப கிடைக்கும், மேலும் அந்த தேர்தல் நடக்காமல் முற்றிலும் தோல்வியடைந்தது என்றால் நிச்சயம் அவருடைய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும், தேர்தலுக்கு முன்பு அந்த வேட்பாளர் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும் அல்லது வாக்கெடுப்பு தொடங்கும் முன் வேட்பாளர் இறந்து விடுகிறார் என்றாலும் பணம் திரும்ப அளிக்கப்படும்.
தற்போது ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்றுள்ள டான் கின் லியான், கடந்த 2011ம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு கடைசி இடத்தை பிடித்தார். அப்போது பதிவான 2,274,773 வாக்குகளில் (4.91 சதவீதம்) வெறும் 104,095 வாக்குகளை மட்டுமே அவர் பெற்றார். அதனால் அந்த ஆண்டு அவர் கட்டிய S$48,000 டெபாசிட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வியுறும் வேட்பாளர்களிடம் இருந்து பெறப்படும் இந்த தொகை, அரசாங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு நிகரான ஒரு ஒருங்கிணைந்த நிதியில் செலுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் வருவாய் இந்த நிதியில் செலுத்தப்படுகிறது, மேலும் இந்த நிதியில் இருந்து அரசு செலவுகள் செய்யப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் கூறுகின்றது.
தேர்தலில் நடந்த மோசடி.. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடி கைது - அடுத்து நடந்தது என்ன?