ஜனாதிபதி தேர்தலில் நடந்த முறைகேடு வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு துவங்கி 2021 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராக இருந்து வந்தவர் தான் டொனால்ட் டிரம்ப். ஆனால் அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டும் அதில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதை திரும்ப பெற வேண்டும் என்று கூறி டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தினால் சுமார் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
undefined
அமெரிக்காவின் பல நகரங்களில் இந்த நடவடிக்கையால் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு, ட்ரம்புக்கு எதிராக பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது அமெரிக்காவின் மாகாண நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இறுதியில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்கா வரலாற்றில் ஒரு அதிபர் மீது குற்றவியல் நடவடிக்கை பதிவாகுது முதல் முறை என்று கூறப்படுகிறது.
இறுதியில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிறகு அவர் சிறையில் வைக்கப்பட்டதாகவும், அங்கு சுமார் 30 நிமிடங்கள் அவர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியாக சுமார் 20 லட்சம் அமெரிக்க டாலர் பிணை தொகையை அவர் செலுத்திய பிறகு, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மோசடி வழக்கு, பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அமெரிக்க முன்னாள் அதிபர் மீது தொடர்ச்சியாக சுமத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பத்திரிக்கையாளர்களை கடுமையாக சாடிய வழக்கிலும் அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.