பிரதமர் மோடி ஜூன் 22ஆம் தேதி அமெரிக்கவுக்குச் செல்வதை முன்னிட்டு நியூ ஜெர்சியில் உள்ள உணவகத்தில் மோடி ஜி தாலி என்ற உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக செல்வதை முன்னிட்டு, நியூ ஜெர்சியில் உள்ள உணவகம் ஒன்றில் 'மோடி ஜி தாலி' என்ற சிறப்பு இந்திய உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீபாத் குல்கர்னி, அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தின் கோரிக்கையின் பேரில் மோடி ஜி தாலி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
மோடி ஜி தாலி:
ஸ்ரீபாத் குல்கர்னியால் உருவாக்கப்பட்ட 'மோடி ஜி தாலி', இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் மாறுபட்ட உணவுகளைக் கொண்டுள்ளது. கிச்சடி, ரஸ்குல்லா, சர்சோ டா சாக் மற்றும் டம் ஆலு முதல் காஷ்மீரி, இட்லி, டோக்லா, சாச் மற்றும் அப்பளம் வரை பலவித பதார்த்தங்கள் உள்ளன உள்ளன.
இந்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், ஐக்கிய நாடுகள் சபை 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதனை சாதனையைக் கொண்டாடவும், சிறுதானிய உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஶ்ரீபாத் குல்கர்னியின் உணவகம் சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கிவருகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பெயரில் மற்றொரு சிறப்பு இந்திய உணவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக உணவக உரிமையாளர் ஶ்ரீபாத் சொல்கிறார். "மோடி ஜி தாலி பிரபலமடையும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இதற்குப் பின் டாக்டர் ஜெய்சங்கர் தாலியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் அவருக்கும் இந்திய அமெரிக்க சமூகத்தில் ராக்ஸ்டார் ஈர்ப்பு உள்ளது" என அவர் கூறுகிறார்.
உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் - மார்னிங் கன்சல்ட் சர்வே தகவல்
56-இன்ச் நரேந்திர மோடி தாலி
உணவகம் ஒன்று பிரதமர் மோடி பெயரில் சிறப்பு உணவை வழங்குவது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள உணவகம் 56 இன்ச் நரேந்திர மோடி தாலி என்ற பெயரில் சிறப்பு சாப்பாட்டைப் பரிமாறியது. டெல்லியின் கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள அந்த உணவகம், 56 பொருட்களைக் கொண்ட பெரிய விருந்தை மோடி பெயரில் வழங்கியது. வாடிக்கையாளர்கள் சைவ மற்றும் அசைவ உணவைத் தேர்வுசெய்யும் வசதியையும் கொடுத்தது.
உணவகத்தின் உரிமையாளர் சுமித் கலாரா கூறுகையில், "பிரதமர் மோடியை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் நமது தேசத்தின் பெருமை. அவருடைய பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை பரிசளிக்க விரும்பினோம். எனவே, இந்த உணவை அறிமுகப்படுத்த முடிவு செய்தோம். அதற்கு '56 இன்ச் மோடி ஜி' தாலி என்று பெயரிட்டுள்ளோம். இதை அவருக்கு பரிசளிக்க விரும்புகிறோம். அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் எங்களால் அதைச் செய்யமுடியாது, ஆனால், அவரை விரும்பும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இங்கு வந்து இந்த உணவை ருசித்து மகிழ்வார்கள்" என நம்புகிறேன் என்றார்.
கூகுள் டிரைவ் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதா? ஈசியாக ஸ்பேஸ் உருவாக்கும் வழிகள் இதோ!
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்
ஜூன் மாதம் அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தனது முதல் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். ஜூன் 22 அன்று அமெரிக்க அதிபருடன் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பயணத்தின்போது அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி பெறுவார்.