“ என்னா வெயிலு.. பேசாம ஃபிரிட்ஜ்குள்ள உக்காந்துக்கலாம்..” சீன நபரின் வைரல் வீடியோ..

By Ramya s  |  First Published Jun 10, 2023, 9:55 PM IST

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், சீன நபர் ஒருவர் ஃப்ரிட்ஜில் அமர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


நம்ம ஊரில் தான் வெயிலின் கொடுமையை தாங்கமுடியவில்லை என்றால், சீனாவிலும் அப்படி தான் போல. சீனாவின் வெப்ப அலையை சமாளிக்க முடியாமல், ஒரு சீன மனிதர் ஒரு வினோதமான தீர்வைக் கண்டுபிடித்தார்.. ஆம். தன்னை குளிர்விக்க அவர் ஃப்ரிட்ஜில் அமர்ந்தார். பிளாஸ்டிக் ஸ்டூலில் ஃப்ரிட்ஜில் அமர்ந்திருக்கும் நபரின் ஒரு வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ மே 31 அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் மே 31 அன்று 37.9 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயர்ந்தது. இந்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், அந்த நபர் குளிர்சாதன பெட்டியில் உள்ள இளஞ்சிவப்பு நிற ஸ்டூலில் அமர்ந்து செல்போனைப் பயன்படுத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

Tap to resize

Latest Videos

Google CEO சுந்தர் பிச்சையின் சம்பளம் இத்தனை கோடியா? வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!

குளிர்சாதனப்பெட்டியில் பல பானங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், வீடியோ ஒரு சூப்பர் மார்க்கெட்டில்  எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வெய்போ மற்றும் சியாஹோங்ஷு உள்ளிட்ட சீன சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இதனிடையே குவாங்டாங் பகுதியில் வசிக்கும் மக்கள் வெப்ப அலையின் போது வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மே 31 அன்று, ஜாங்ஷான் மற்றும் மெய்சோ நகரங்களில் வெப்பநிலை மே 31 அன்று 37.9 டிகிரி செல்சியஸைத் தொட்டது. மே மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருந்ததாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சாதுர்ய செயலால் பெரும் விமான விபத்தை தவிர்த்த விமானிகள்.. நடுவானில் நடந்த அதிசயங்கள்

click me!