ஜப்பானில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, கடற்பரப்பில் புதிய தீவு ஒன்று உருவாகி உள்ளது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, கடற்பரப்பில் புதிய தீவு ஒன்று உருவாகி உள்ளது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜப்பானில் ஐவோ ஜிமாவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் (அரை மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த பெயரிடப்படாத எரிமலை, அக்டோபர் 21 அன்று வெடிக்க தொடங்கியது.
இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்த 10 நாட்களுக்குள், எரிமலை சாம்பல் மற்றும் பாறைகள் ஆழமற்ற கடற்பரப்பில் குவிந்தன. இதனால் அதன் முனை கடல் மேற்பரப்பில் மேலே உயர்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது. இது 100 மீட்டர் (328 அடி) விட்டம் மற்றும் கடலுக்கு மேலே 20 மீட்டர் (66 அடி) உயரத்தில் ஒரு புதிய தீவாக மாறியது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் எரிமலைப் பிரிவின் ஆய்வாளரான யுஜி உசு தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஐவோ ஜிமா அருகே எரிமலை செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இதேபோன்ற கடலுக்கடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் ஒரு புதிய தீவு உருவாவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்றும் அவர் கூறினார். மேலும், அந்த இடத்தில் தற்போது எரிமலை செயல்பாடு குறைந்து விட்டது, மேலும் புதிதாக உருவான தீவு ஓரளவு சுருங்கி விட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த தீவு குறித்து நிபுணர்கள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர், இந்த புதிய தீவு எரிமலைக்குழம்பு அல்லது பியூமிஸ் போன்ற எரிமலைப் பாறைகளை விட நீடித்து இருக்கும் ஏதாவது இருந்தால் அது நீண்ட காலம் உயிர்வாழ முடியும். ஆனால் அங்கு நிலைத்தன்மை இல்லாததாக் புதிய தீவு நீண்ட காலம் நீடிக்காது எனவும் கூறினார்.
இந்த கிராமத்துக்கு சென்றால் ரூ. 25 லட்சம் கிடைக்கும்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..
எரிமலை வெடிப்புகளால் புதிய தீவுகள் உருவாவது இது முதன்முறையல்ல. கடலுக்கடியில் எரிமலைகள் மற்றும் நில அதிர்வு நடவடிக்கைகளால் கடந்த காலங்களில் புதிய தீவுகளை உருவாக்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டில், டோக்கியோவிற்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் உள்ள நிஷினோஷிமாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஒரு புதிய தீவு உருவாவதற்கு வழிவகுத்தது.
மேலும் 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு கடலுக்கு அடியில் இருந்து ஒரு சிறிய தீவு தோன்றியது. 2015 ஆம் ஆண்டில், டோங்கா கடற்கரையில் ஒரு நீர்மூழ்கி எரிமலை ஒரு மாத கால வெடிப்பின் விளைவாக ஒரு புதிய தீவு உருவானது. உலகில் உள்ள சுமார் 1,500 எரிமலைகளில், 111 ஜப்பானில் உள்ளன, இதனால் இது பசிபிக் "நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.