Canada Airport : காதலில் லைத்திருப்பவர்கள்ம் பெரும்பாலும் தங்கள் துணையிடம் தங்கள் அன்பை வெளிப்படுத்த தனித்துவமான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதுகுறித்த வீடியோகள் இணையத்தில் பல உள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
இவை மக்கள் தங்கள் துணையை சிறப்புற உணர வைப்பதற்காக, தங்கள் பெரும் காதலை வெளிக்கொணர்வதை காட்டுகிறது. இந்நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு தான் சந்தித்த தொலைதூர காதலனிடம், பெண் ஒருவர் தனது காதலை அழகாக வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், கனடாவில் உள்ள விமான நிலையத்தில் அந்த பெண் தனது துணையை வரவேற்க நடனமாடுவதை காணலாம். ஒரு டிராலியில் சாமான்கள் நிறைந்த கையேடு ஒருநபர் விமான நிலையத்தில் இறங்குவதை அந்த வீடியோவில் நம்மால் பார்க்கமுடிகிறது. ஒரு சில ஆண்கள் அவரை வரவேற்று அரவணைத்து ரோஜாக்களையும் கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது, தன் காதலி எங்கே இருக்கிறாள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறார். இறுதியாக, அந்த பெண் அவர் முன் தோன்றி, ஷெர்ஷா படத்திலிருந்து 'ராத்தான் லம்பியான்' நடனத்தின் மூலம் அவரை வரவேற்கிறார். அந்த காதலன் இன்ப அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணை கட்டியணைத்துக்கொள்கிறார்.
டொராண்டோவைச் சேர்ந்த நிக்கி ஷாவால் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "நீண்ட தூர உறவுகள், சாதாரண உறவைப் போலவே ஆச்சரியமாக இருக்கிறது, அதை நான் நிரூபிக்கிறேன்," என்று அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்.
எந்த விஷயத்திலும் இந்தியா சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்! சிக்னல் கொடுத்த வெள்ளை மாளிகை!
அவர் வெளியிட்ட அந்த நீண்ட பதிவில் தொலைதூர உறவுகள் மற்றும் நம்பிக்கை, தொடர்பு, பொறுமை மற்றும் அன்புடன் அவற்றை எவ்வாறு வழிநடத்துவது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார். அவர் எழுதியதாவது.., ''உண்மை என்னவென்றால் நீண்ட தூர உறவுகளுக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகள் ஒவ்வொரு ஜோடிக்கும் தனிப்பட்டவை மற்றும் முன் வரையறுக்கப்பட்டவை அல்ல. ஆனால், அதைச் செயல்படுத்துவதில் இரண்டு பேர் உறுதியுடன் இருக்கும் உறவுகள் மட்டுமே உயிர்வாழ்கின்றன" என்று கூறியுள்ளார்.