எந்த விஷயத்திலும் இந்தியா சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்! சிக்னல் கொடுத்த வெள்ளை மாளிகை!

By SG Balan  |  First Published Nov 9, 2023, 4:56 PM IST

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடிக்கும் சூழலில் வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்.


அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக இருக்கும் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் விவகாரம் உட்பட உலகெங்கிலும் உள்ள எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்திலும் தனது நிலைப்பாட்டை சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடிக்கும் சூழலில் வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதில் இந்தியாவுக்கு ஏதேனும் பங்கு இருப்பதாக அமெரிக்கா கருதுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

"மத்திய கிழக்கு பிரச்சினை உள்பட, உலகெங்கிலும் உள்ள எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சினையிலும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாங்கள் இந்திய அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் விட்டுவிடுவோம்" என்று கிர்பி தெளிவுபடுத்தினார்.

விமானத்தில் உல்லாசப் பயணம்... தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்

இந்தியா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். "இந்தியா அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி இங்கு வந்திருந்தபோது அதை முழுமையாகக் காணமுடிந்தது என்று நினைக்கிறேன்" என்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிர்பி கூறியிருக்கிறார்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது நடத்திய வரலாறு காணாத தாக்குதலை நடத்தியது. இதில் 1,400 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பயங்கரவாதக் குழு பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.

அதற்குப் பதிலடியாக காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 10,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய பலமுனைத் தாக்குதலை 'பயங்கரவாதத் தாக்குதல்கள்' என்று இந்தியா விமர்சித்தது. பின்னர், இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காசா மக்கள் பலியாவது பற்றிய சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்தன.  இதன் எதிரொலியாக இந்தியாவும் இஸ்ரேல் சர்வதேசச் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி எப்போது ஆரம்பம்? எலான் மஸ்க்குடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!

click me!