கத்தார் ராணுவ ரகசியத்தைக் கசியவிட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்த முயலும் இந்தியா

By SG Balan  |  First Published Nov 9, 2023, 8:24 PM IST

எட்டு பேரையும் ஜாமீனில் இந்தியாவுக்கு அழைத்துவர முடியாத நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்திருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படை பயிற்சி மற்றும் சேவைகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகிய எட்டு பேர் பணிபுரிந்து வந்தனர்.

Latest Videos

undefined

எந்த விஷயத்திலும் இந்தியா சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்! சிக்னல் கொடுத்த வெள்ளை மாளிகை!

இவர்கள் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்த ரகசியங்களை இஸ்ரேஸ் ராணுவத்துக்குப் பகிர்ந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. கத்தார் உளவுத்துறை சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களைக் கைது செய்தது. செப்டம்பர் மாதம் இவர்கள் கைதானது குறித்த விவரம் இந்திய அரசுக்கும் எட்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

எட்டு பேரையும் ஜாமீனில் இந்தியாவுக்கு அழைத்துவர இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு கத்தார் அரசு ஒத்துழைக்காத நிலையில், அண்மையில் 8 பேருக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனையை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி தகவல் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அரிந்தம் பக்சி, "கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்து பின், சட்டக்குழுவுடன் பகிரப்பட்டது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்திருக்கிறோம். கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும்: அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்

click me!