உலகம் முழுவதும் இதுவரை 853 ஐடி நிறுவனங்கள் 137,492 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. இன்னும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
layoffs.fyi இணையதளம் வெளியிட்டு இருக்கும் தகவலில் கோவிட் 19 ஏற்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் 1,388 ஐடி நிறுவனங்கள் 2,33,483 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் மாத மத்தியில், மெட்டா, ட்விட்டர், சேல்ஸ்ஃபோர்ஸ், நெட்ஃபிக்ஸ், சிஸ்கோ, ரோகு உள்பட பிற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆள்குறைப்பு நடவடிக்கையால் 73,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை இழந்தனர்.
கிரஞ்ச்பேஸ் தகவலின்படி, ராபின்ஹூட், க்ளோசியர் மற்றும் பெட்டர் ஆகிய நிறுவங்கள் நடப்பு 2022 ஆம் ஆண்டில், கணிசமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. அமேசான், பிசி மற்றும் பிரிண்டர் நிறுவனமான ஹெச்பி போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வரும் நாட்களில் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்து வைத்துள்ளன. மேலும் வரும் நாட்களில் 6,000 ஊழியர்களை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளன.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறுகையில், "தலைவர்கள் தொடர்ந்து மாற்றங்களைச் செய்வதால் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தில் அதிக பணி நீக்கங்கள் இருக்கும்'' என்று ஊழியர்களை எச்சரித்துள்ளார்.
நிறுவனங்களில் ஆட்கள் குறைப்பு வருமானங்களையும் பாதித்துள்ளது. அலெக்சா வெர்சுவல் உதவி வர்த்தக நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் 10 பில்லியன் டாலரை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், சுமார் 10,000 ஊழியர்களை அதாவது, சரியான செயல்திறன் இல்லாத ஊழியர்களை அல்லது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை நீக்குவதற்கு தயாராகி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
Single Name Passport UAE: பாஸ்போர்டில் ஒற்றைப் பெயர்தான் இருப்பவர்கள் கவனத்திற்கு ! UAE செல்லத் தடை!
இந்தியாவில் நிதி பற்றாக்குறை காரணமாக பைஜூஸ், அன்அகாடமி மற்றும் வேதாந்து போன்ற கல்வி நிறுவனங்கள் சுமார் 16,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஓலா, கார்ஸ் 24, மீஷோ, லீட், எம்பிஎல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் ஊழியர் குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையே ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்துவதை குறைத்துக் கொண்டுள்ளது. மேலும், பணி நிரந்தமாக்குவதையும் கடந்த 12 மாதங்களில் 61 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளது.